income tax filing : மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.
அதேபோல், நிறுவனங்களும் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட (Audit Report) தணிக்கை அறிக்கை மற்றும் வருமான கணக்கையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும். வருமான வரி ரிட்டன்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூலை மற்றும் செப்டம்பர்) தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
வருமானத்திற்கான கூடுதல் வரி ஏதேனும் செலுத்தவேண்டியது இருந்தால் வரிக்கான வட்டியையும் கூடவே செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் தானே நோட்டீஸ் வரும் என்று நினைக்க வேண்டாம். வருமானம், செலவுக்கணக்கு, வங்கி கணக்கு வட்டிக்கு வரி கட்டிய விவரங்கள் எல்லாம் சரியாக இல்லாமல் இருந்தாலும், நோட்டீஸ் வரும்.
அதுபோல, வரிச்சலுகைக்கான 80 டி என்பதற்கு பதில் தவறான விதிப்பிரிவை போட்டிருந்தாலும், எச்ஆர்ஏ. வரவில் குறைவான தொகையையோ போட்டிருந்தாலும் கூட நோட்டீஸ் வரும். இப்படி நோட்டீஸ் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் வகை ரீபண்ட் கூட வராது. இப்போதெல்லாம் பெரும்பாலோர் ஆடிட்டரை கூட அணுகி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கேட்பதில்லை. தாங்களே, கம்ப்யூட்டர் ஆன்லைனில் போய் ரிட்டர்ன் தாக்கல் செய்து விடுகின்றனர். அப்படி செய்யும் போது தான் இப்படிப்பட்ட தவறுகள் வருகின்றன. மேலும், சிறிய எழுத்துப்பிழை பெயரிலோ, வேறு முக்கிய தகவல்களிலோ ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.
Income tax ரூல்ஸ் மாறியாச்சி.. கவனமா இருங்க!
சரி வருமான வரி தாக்கல் செய்யும் போது தெரியாமல் கூட இந்த தவறையெல்லாம் செய்து விடாதீர்கள்!
1. உங்களது ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தாலே நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். நமது சம்பளம் குறைவுதானே என்று இருந்துவிட வேண்டாம். 80C சட்டப்பிரிவின் கீழ் உங்களுக்கு வரி விலக்கு இருந்தாலும், நீங்கள் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
2. பொதுவாக வருமான வரிக்காக விவரங்கள் தாக்கல் செய்யும்போது, வங்கிகளில் பண இருப்பின் மீதான வட்டி வருவாய், வட்டி வருவாய், ஆர்டி மீதான வருமானம், பத்திரங்கள் ஆகியவை குறித்து எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை. ''savings bank balance''க்கு மட்டுமே, 80TTAயின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர 5 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை மீதான வட்டி வருவாய்க்கு முற்றிலும் வரி செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி பிபிஎப், வரி இல்லா பத்திரங்கள் ஆகியவை குறித்தும் குறிப்பிட வேண்டும்.
3. தனிப்பட்ட விவரங்கள்: பெயர், தொலைபேசி எண், மொபைல் எண், பிறந்த நாள், முகவரி, இ மெயில் ஐடி ஆகியவற்றை சரியாக கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட இந்த விவரங்களை PAN கார்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்