scorecardresearch

பென்சன் பணம் வாங்குறீங்களா? இந்த 12 டிஜிட் PPO நம்பர் முக்கியம்

இந்த நம்பர் ஒருவேளை தொலைந்துபோனாலோ அல்லது மறந்துபோனாலோ பயப்படத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக இந்த நம்பரைப் பெறும் வசதியை இபிஎஃப்ஓ ஏற்படுத்தியுள்ளது.

பென்சன் பணம் வாங்குறீங்களா? இந்த 12 டிஜிட் PPO நம்பர் முக்கியம்

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்சன் தொகை பெறும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக PPO (Pension Payment Order)நம்பர் வழங்கப்படுகிறது. 12 டிஜிட் கொண்ட அந்த பிபிஓ எண், அனைத்து தகவல்தொடர்புகளுக்கும் ஒரு குறிப்பு எண்ணாக செயல்படுகிறது.

பிபிஓ நம்பர் என்றால் என்ன?

மத்திய ஓய்வூதியக் கணக்கு அலுவலகம் கூற்றுப்படி, ஒவ்வொரு பிபிஓ நம்பரின் முதல் 5 டிஜிட், பிபிஓ நம்பர் வழங்கிய ஆணையத்தின் குறியீட்டு எண்ணைக் குறிக்கின்றன. அடுத்த 2 டிஜிட்கள் பிபிஓ நம்பர் வழங்கப்பட்ட ஆண்டை குறிக்கிறது. அடுத்த நான்கு டிஜிட்கள், PPO இன் வரிசை எண்ணைக் குறிக்கின்றன, கடைசி எண் கணினி சரிபார்ப்பு எண்ணாக செயல்படுகிறது

உதாரணமாக, உங்களது பிபிஓ எண் 709650601302 என வைத்துக்கொண்டால், முதல் ஐந்து டிஜிட் AG மத்திய பிரதேசத்தை சொல்கிறது. அடுத்துள்ள 06 என்ற நம்பர், பிபிஓ வழங்கப்பட்ட 2006ஆம் ஆண்டை குறிக்கிறது. அடுத்ததாக, 130 என்பது பிபிஓ வரிசை எண்ணை குறிக்கிறது. கடைசியாகவுள்ள 2, கம்பூயுட்டர் கோட் ஆகும்.

இவ்வளவு முக்கியமான இந்த நம்பர், ஒருவேளை தொலைந்துபோனாலோ அல்லது மறந்துபோனாலோ பயப்படத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக இந்த நம்பரைப் பெறும் வசதியை இபிஎஃப்ஓ ஏற்படுத்தியுள்ளது.

பிபிஓ நம்பரை கண்டறியும் வழிமுறை

Step 1: முதலில் இபிஎஃப்ஓ-இன் அதிகாரப்பூர்வ தளமான http://www.epfindia.gov.in -க்கு செல்ல வேண்டும்.

Step 2: அடுத்து, ‘Online Services’ பிரிவில் ‘Pensioners Portal’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.

Step 3: அடுத்து தோன்றும் புதிய பக்கத்தில், ‘Know Your PPO No’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Step 4: பென்சன் வரும் வங்கிக் கணக்கு எண் அல்லது PF நம்பரைப் பதிவிடலாம்.

Step 5: அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு ‘submit’ கொடுத்தால் போதும், பிபிஓ நம்பர் திரையில் தோன்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: How to find ppo number for pension in epf

Best of Express