/tamil-ie/media/media_files/uploads/2019/03/a867.jpg)
Post Office Senior Citizen Savings Scheme | போஸ்ட் ஆபிஸ் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Post Office Senior Citizen Savings Scheme | மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது.
இந்தத் திட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சிவில் பணியாளர்கள் மற்றும் 55-60 மற்றும் 50-60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
வட்டி வருமானம்
இந்தத் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.820 வட்டி வருமானம் கிடைக்கும். ரூ.20,000, ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் முறையே ரூ.1,640, ரூ.8200 மற்றும் ரூ.41 ஆயிரம் வட்டி கிடைக்கும்.
அதேநேரம் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ஆண்டுக்கு 49,200 கிடைக்கும். இது மாதந்தோறும் ரூ.4,100 வட்டி வருமானம் ஆகும்.
அந்த வகையில் இந்தத் திட்டத்தில் ரூ.20 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ரூ.164000 லட்சம் மற்றும் 2,46,000 வட்டி வருமானம் கிடைக்கும்.
மற்ற திட்டங்கள்
போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு கணக்குக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும் ஓராண்டு, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 6.9 சதவீதம், 7 சதவீதம், 7.1 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதேநேரம் பிபிஎஃப் முதலீடுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.