/indian-express-tamil/media/media_files/2025/05/03/YRzusGJ4p0YQ4zVQNGBa.jpg)
அரசு மூலம் நாம் பெறும் ஒவ்வொரு ஆவணமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படும். குறிப்பாக, வீட்டுக் கடன் போன்றவற்றை வங்கிகளில் இருந்து பெறுவதற்கு பான் கார்ட் அவசியம் தேவைப்படும்.
எனினும், சில சமயங்களில் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்ட் தொலைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. இதனை பெற பிரவுசிங் செண்டருக்கு சென்றால் சுமார் ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால், வீட்டில் இருந்தபடியே ரூ. 50 மட்டும் செலவு செய்து நம்முடைய வீட்டிற்கு ரீ பிரின்ட் செய்யப்பட்ட பான் கார்டை வரவழைப்பது எப்படி என்று இந்தக் குறிப்பில் விரிவாக காணலாம். இதன் வழிமுறை சுலபமாக இருக்கும்.
நம்முடைய ஸ்மார்ட்போனில் ரீ பிரின்ட் பான் கார்ட் என்று கூகுளில் சென்று டைப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது, என்.எஸ்.டி.எல் அதிகாரப்பூர்வ வலைதளத்தை நாம் அடைய முடியும்.
இந்த வலைதளத்திற்கு சென்று பான் கார்டின் எண், ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். இவற்றை பதிவிட்டதும் நம்முடைய விவரங்கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும்.
இவை அனைத்தையும் சரி பார்த்த பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். இனி நம்முடைய செல்போனுக்கு வரும் ஒ.டி.பி-யையும் அதில் பதிவிட வேண்டும். இப்போது, ஆன்லைன் மூலமாக ரூ. 50 செலுத்த வேண்டும்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றினால், நம்முடைய வீட்டிற்கே பான் கார்டை ரீ பிரின்ட் செய்து அனுப்பி விடுவார்கள். இதற்காக பிரவுசிங் செண்டருக்கு சென்று அதிக பணம் செலவிட வேண்டிய அவசியம் கிடையாது.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.