Advertisment

மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு; ரூ.1.14 லட்சம் மாத ஒய்வூதியம்: இது எப்படி சாத்தியம்?

தேசிய ஓய்வூதியத் திட்டம், அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது ஓய்வூதியத்தின் போது மொத்தத் தொகையையும் அதன் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்கும் ஒரு திட்டமாகும்.

author-image
WebDesk
New Update
national pension system calculator, national pension system returns, national pension system calculation, nps eligibility, nps KYC, nps Tax Benefits, nps Calculator

என்பிஎஸ் (NPS) வட்டி விகிதம் 9% - 12% வரை இருக்கும். 18-60 வயதுக்குட்பட்ட எந்த இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்றைய காலத்தில் ஓய்வூதிய திட்டமிடல் என்பது அத்தியாவசியமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் திட்டங்களில் சில உத்தரவாதமான வருமானத்தை உறுதி செய்கின்றன.

மேலும், ஓய்வு பெறும்போது மொத்த தொகை கிடைக்கின்றது. அந்த வகையில், தேசிய ஓய்வூதியத் திட்டம், அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது ஓய்வூதியத்தின் போது மொத்தத் தொகையையும் அதன் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்கும் ஒரு திட்டமாகும்.

Advertisment

alagappa university ug results, alagappauniversity.ac.in, அழகப்பா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகள்

இதில், சரியாக முதலீட்டு செய்தால், குறைந்த முதலீட்டுத் தொகையுடன் ஒரு பெரிய கார்பஸை உருவாக்க முடியும். அதாவது, வெறும் ரூ. 10,000 மாதாந்திர முதலீடு, ஒருவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் கெளரவமான மொத்தத் தொகையையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் மாத ஓய்வூதியத்தையும் குவிக்க உதவும்.

வரி விலக்கு

இந்தத் திட்டத்தில், அரசு மற்றும் தனியார் துறையில் அடுக்கு-I கணக்குகளைக் கொண்ட பணியாளர்கள் பிரிவு 80CCD இன் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்குகளை அனுபவிக்க முடியும். அடுக்கு I திட்டத்தின் கீழ் ஒருவர் மேலும் ரூ.50,000 வரிச் சலுகைகளைப் பெறலாம்.

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதலீடு

கணக்கு வைத்திருப்பவர் மாதம் 10,000 ரூபாயை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து அதன் மீது ஆண்டுக்கு 10 சதவீத வருமானத்தைப் பெற்றால், அந்தக் காலகட்டத்தில் அவர்களின் முதலீடு ரூ. 42 லட்சமாக இருக்கும், மதிப்பிடப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 34082768 (ரூ. 3.41 கோடி) மற்றும் மொத்த கார்பஸ் ரூ 38282768 (ரூ 3.83 கோடி) இருக்கும்.

Senior Citizen Fixed Deposit Interest Rate hiked by four banks this month

ஓய்வு பெறும்போது 60 சதவீதத் தொகையைத் திரும்பப் பெற முடிவு செய்தால், மொத்தத் தொகையாக ரூ. 22969661 (2.30 கோடி) பெறுவீர்கள், மீதமுள்ள ரூ. 15313107 (ரூ. 1.53 கோடி) ஆண்டுத் தொகையாக முதலீடு செய்யப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nps Pension Scheme National Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment