scorecardresearch

PPF: மாதம் ரூ1000 முதலீடு செய்து ரூ26 லட்சம் பெறுவது எப்படி?

நீங்கள் பிபிஎப் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால் போதும், அதனை ரூ26 லட்சமாக மாற்றுவதற்கான ஸ்டெப்ஸ்களை இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்

PPF

2022-23 முதல் காலாண்டில் பொதுவருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றவில்லை. PPF திட்டத்தின் வட்டி விகிதம் முதல் காலாண்டில் 7.1 சதவீதமாக நீடிக்கிறது.

PPF திட்டம் 1968 இல் தேசிய சேமிப்பு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறு சேமிப்பு திட்டம், லாபகரமான வருமானமாக மாறியுள்ளது. இதில், சிறிய ட்ரிக் ஒன்றை ஃபாலோ செய்தால், நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை பெறலாம்.

நீங்கள் பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால் போதும், அதனை 26 லட்சமாக மாற்றுவதற்கான ஸ்டேப்ஸ்களை இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்

PPF திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். இதில், ஆண்டிற்கு குறைந்தப்பட்சம் 500 ரூபாய் முதல் அதிகப்பட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். டெபாசிட், அதிகப்பட்சம் 12 பணப்பரிவர்த்தனைகளில் மேற்கொள்ள வேண்டும்.

15 ஆண்டுகளில் பிபிஎப் திட்டம் முதிர்ச்சியடையும் சமயத்தில், அதில் சேர்ந்த வட்டிதொகையுடன் முதலீட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம், PPF திட்டத்தை கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம்.

நீங்கள் 20 வயதில் PPF திட்டத்தில் முதலீடு செய்கிறிர்கள் என்றால், அதனை 60 வயது வரை நீட்டித்துக்கொள்ள முடியும்.

Investment for the first 15 years

நீங்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 15 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தால், உங்களது மொத்த முதலீட்டு தொகை ரூ.1.80 லட்சம் ஆகும். 7.1 சதவீத வட்டி தொகையான 1.45 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, உங்களுக்கு 3.25 லட்சம் ரூபாய் கிடைத்திடும்.

PPF Extended for 5 years

நீங்கள் பணத்தை எடுக்காமல், கூடுதலாக 5 ஆண்டுக்கு பிபிஎப் திட்டத்தை நீட்டிக்க வேண்டும். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், உங்களது மொத்த தொகை ரூ3.25 லட்சத்திலிருந்து ரூ5.32 லட்சமாக உயரக்கூடும்.

PPF extended second time

தொடர்ந்து, 2 ஆவது முறையாக 5 ஆண்டுகள் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், உங்கள் பிபிஎப் தொகை ரூ8.24லட்சமாக உயரக்கூடும்

PPF extended for third time

மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிஎப் திட்டம் நீட்டிக்கப்பட்டால், மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகையில், 30 ஆண்டுகலா முதலீட்டில் உங்களது மொத்த பிபிஎப் தொகை 12 லட்சத்து 36 ஆயிரமாக உயர்ந்திடும்.

PPF extended for fourth time

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்தால், மாதம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் உங்களது பிபிஎப் தொகை 18.15 லட்சமாக உயர்ந்துவிடும்.

PPF extended for fifth time

35 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒருமுறை இறுதியாக பிபிஎப் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளுங்கள். இதில், மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால் போதும், 40 ஆண்டுகளில் உங்களது மொத்த பிபிஎப் தொகை ரூபாய் 26 லட்சத்து 32 ஆயிரமாக உயர்ந்துவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: How to get rs 26 lakh by investing just rs 1000 per month ppf