இந்திய அஞ்சலகங்கள் குறைந்த ரிஸ்க், உறுதியளிக்கப்பட்ட வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கிவருகின்றன.
அந்த வகையில் கிராம சுரக்ஷா திட்டம் மிக முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தில் தினந்தோறும் ரூ.50 வீதம் மாதம் ரூ.1500 சேமித்தால் போதும், முதிர்ச்சியின்போது ரூ.31 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும்.
19 வயது முதல் 55வயதுக்குள் இருக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம்.
முதலீட்டாளர்கள் அஞ்சல் அலுவலக கிராம் சுரக்ஷா திட்டத்தின் பிரீமியங்களை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம். பிரீமியம் செலுத்துவதற்கு முதலீட்டாளர்கள் 30 நாள் தளர்வு காலமும் அனுமதிக்கப்படும்.
முதலீட்டாளர்கள் அஞ்சல் அலுவலக கிராம் சுரக்ஷா திட்டத்தில் கடன் பெறலாம். மேலும், திட்டத்தை எடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை நீங்கள் சரண்டர் செய்யலாம். இருப்பினும், சரணடையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் எந்த நன்மையையும் பெற மாட்டார்கள்.
இந்தத் திட்டத்தில், 19 வயது முதலீட்டாளர் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் முதலீடு செய்யத் தொடங்கினால், முதலீட்டாளர்கள் 55 வயதில் சுமார் ரூ.31.60 லட்சத்தைப் பெறுவதற்கு மாதத்திற்கு ரூ.1515 பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.
அதேபோல், 58 வயதில் ரூ.33.40 லட்சம் பெறுவதற்கு மாதந்தோறும் ரூ.1463 பிரீமியமாக செலுத்த வேண்டும். 60 வயதில் ரூ.34.60 லட்சம் பெற ரூ.1411 பிரீமியம் தொகை ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“