scorecardresearch

ரூ.300 முதலீட்டில் ரூ.50 லட்சம் பெறலாம்… இந்த ஸ்கீமை பாருங்க

தினந்தோறும் ரூ.300 முதலீடு செய்து, முதிர்ச்சியின்போது ரூ.50 லட்சம் பெறும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.

Pay premium once and get Rs 124000 pension
சாரல் பென்ஷன் யோஜனாவில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 எடுக்க வேண்டியது அவசியம்

Sukanya Samriddhi Account Returns Calculation 2023: பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் பொருளாதார உதவிக்காக தொடங்கப்பட்ட திட்டம் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்படும் இத்திட்டம் பெண் குழந்தைகளுக்காக பிரத்யேக திட்டம் ஆகும்.

இத்திட்டத்தில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சேர்க்கலாம். மேலும் வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் இந்தத் திட்டத்தில் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் தற்போது 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தினந்தோறும் ரூ.35 முதலீடு செய்து ரூ.5 லட்சம் ரிட்டன் பெறலாம். அதாவது மாதந்தோறும் ரூ.1050 முதலீடு செய்ய வேண்டும்.
அதேபோல், தினந்தோறும் ரூ.100 முதலீடு செய்து ரூ.16 லட்சம் ரிட்டன் பெறலாம். அதேநேரத்தில் 33 லட்சம் வரை ரூ.200 வரை தினமும் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும், ஒருவர் ரூ.50 லட்சம் ரிட்டன் பெற விரும்பினால் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் அல்லது தினமும் ரூ.300 முதலீடு செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: How to get rs 50 lakh return by investing rs 300 per day