நாட்டில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. பெரும்பாலும் காப்பீடுகள் இந்த ஓய்வூதிய திட்டங்களை முன்னிறுத்துகின்றன. இந்திய அரசும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை தன்னகத்தை கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் சுமார் 200 ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் 5000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம்.
தற்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டம் குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் ரூ.210 டெபாசிட் செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு, அதாவது 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
இதில் ஒவ்வொரு மாதமும் உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போதைய விதிகளின்படி, 18 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு அதிகபட்சமாக ரூ.5,000 சேர்த்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.210 செலுத்த வேண்டும்.
இதே தொகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 626 ரூபாயும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற, 18 வயதில் முதலீடு செய்தால், மாதம் ரூ.42 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“