சரியான நிதி விழிப்புணர்வு கொண்ட பெற்றோர், குழந்தை பிறந்த உடனேயே அனைத்து வகையான நிதித் திட்டமிடலையும் தொடங்குகிறார்கள்.
சிலர் குழந்தைகளின் பெயரில் பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள்.
சிலர் குழந்தையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்காவது ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்கிறார்கள். நீங்களும் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் அதாவது போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்யலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-2.jpg)
வங்கிகளை விட தபால் அலுவலகத்தில் 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட் சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் விரும்பினால், தொகையை மூன்று மடங்குக்கு மேல் செய்யலாம்.
ரூ.லட்சம் முதலீடு, ரூ.15 லட்சம் ரிட்டன்
ரூ.5 லட்சத்தை ரூ.15 லட்சமாக மாற்ற, நீங்கள் முதலில் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ₹5,00,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த 5 வருட ஃபிக்ஸட டெபாசிட்டுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.
தற்போதைய வட்டி விகிதத்தைக் கொண்டு கணக்கிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும். இந்தத் தொகையை நீங்கள் திரும்பப் பெற வேண்டியதில்லை, ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதை முதலீடு செய்யவும்.
இந்த வழியில், 10 ஆண்டுகளில் நீங்கள் 5 லட்சத்தில் வட்டி மூலம் ரூ. 5,51,175 சம்பாதிப்பீர்கள், மேலும் உங்கள் தொகை ரூ.10,51,175 ஆக மாறும். இந்தத் தொகை இருமடங்கு அதிகமாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Post-Office-Saving-Scheme-Post-Office-Selva-Magal-Thittam.jpg)
ஆனால் இந்த தொகையை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதாவது தலா 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை முதலீடு செய்ய வேண்டும்.
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும். 15 வது ஆண்டில், முதிர்வு நேரத்தில், நீங்கள் முதலீடு செய்த 5 லட்சத்தில் வட்டியில் இருந்து மட்டும் 10,24,149 ரூபாய் சம்பாதிப்பீர்கள். இந்த வழியில், நீங்கள் முதலீடு செய்த 5 லட்சத்து 10,24,149 ரூபாயை இணைத்தால், உங்களுக்கு மொத்தம் ரூ.15,24,149 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“