/indian-express-tamil/media/media_files/2025/06/15/lfqteMBDIUYj8tr8JtB2.jpg)
கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் பெறுபவர்களுக்கு மிக முக்கியமானதாகும். கடன் வழங்குநர்கள், கடன் ஒப்புதலை இந்த கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையிலேயே தீர்மானிக்கிறார்கள். மோசமான கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள், அதனை மேம்படுத்துவதன் மூலம் சாதகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கடன் பெற தகுதியுடையவர்கள் ஆகலாம். இந்த சாதகமான விதிமுறைகளில் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் விரைவான செயலாக்கம் ஆகியவை அடங்கும்.
கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது ஒரு நீண்ட செயல்முறை என்பதால், நீங்கள் எவ்வளவு விரைவாக தொடங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவாக வருட இறுதிக்குள் அதை மேம்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளை இதில் காணலாம்.
தவறுகளை திருத்துதல்:
முதலில், உங்கள் கிரெடிட் அறிக்கையை சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, செலுத்தப்பட்ட தொகை 'நிலுவையில் உள்ளது' என்று காட்டப்படலாம். இதுபோன்ற தவறுகளை அடையாளம் கண்டு, அவற்றை கடன் தகவல் நிறுவனங்களிடம் தெரிவித்து சரிசெய்ய வேண்டும்.
கிரெடிட் பயன்பாட்டை குறைத்தல்:
உங்கள் கிரெடிட் பயன்பாட்டை 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, உங்கள் மொத்த கடன் வரம்பு ரூ. 20 லட்சம் எனில், உங்கள் கிரெடிட் பயன்பாட்டை ரூ. 6 லட்சத்திற்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும். சரியான விகிதத்தை பராமரிக்க, ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். இதனால் ஒரு கார்டின் முழு வரம்பையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
உங்கள் நிலுவை தொகையை செலுத்துதல்:
முக்கியமாக, உங்கள் நிலுவை தொகையை தவறாமல் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நிலுவை தொகையை ஒருமுறை தவறியது கூட கிரெடிட் ஸ்கோரில் கணிசமான இழப்புக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு மாதமும் உங்கள் பில்களை உரிய தேதிக்கு முன்னதாகவே செலுத்துவது மிகவும் அவசியம். இது உங்கள் கிரெடிட் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.
பழைய கிரெடிட் கார்டுகள்:
ஏற்கனவே இருக்கும் பழைய கிரெடிட் கார்டை செயலிழக்க செய்ய வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீண்ட கால கிரெடிட் வரலாறு, நீங்கள் கடனை திறம்பட நிர்வகித்துள்ளீர்கள் என்பதை கடன் வழங்குநர்களுக்கு காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.