/indian-express-tamil/media/media_files/2025/05/03/cEeKZiABFHra4N5cL9sl.jpg)
பொதுவாகவே, நமக்கு தேவைப்படும் நேரத்தில் லோன் எடுக்கும் போது சிபில் ஸ்கோர் பார்க்கப்படும். அந்த சூழலில் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், லோன் எடுப்பது சிரமமாக இருக்கும்.
இந்த, சிபில் ஸ்கோர் சில மாதங்களில் குறைந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது போன்ற நேரத்தில் கிரேடிட் கார்ட் பயன்படுத்தி சிபில் ஸ்கோரை உயர்த்தலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
அதன்படி, நமது செமிப்பு கணக்கு இருக்கும் வங்கியை அணுகி, நம்மிடம் இருப்பில் இருக்கும் தொகையை பயன்படுத்தி வைப்பு நிதி கணக்கை தொடங்க வேண்டும். இதையடுத்து, அதே வங்கி மேலாளரை அணுகி சிபில் ஸ்கோர் மிகவும் குறைவாக இருப்பதைக் கூறி, வைப்பு நிதி கணக்கை பயன்படுத்தி ஒரு கிரெடிட் கார்ட் வழங்குமாறு பரிந்துரை முன்வைக்கலாம்.
இதன் பின்னர், ஒவ்வொரு மாதமும் நம்முடைய பணப்பரிவர்த்தனைகளை அந்த கிரெடிட் கார்டை உபயோகித்து மேற்கொள்ள வேண்டும். இந்தக் கிரெடிட் காட்டிற்கு 80 சதவீதம் செலவின வரம்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஒவ்வொரு மாதமும் 30 சதவீத வரம்பை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். இது மட்டுமின்றி வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் இந்தக் நிலுவைக் கட்டணத்தை செலுத்தி முடிக்க வேண்டும்.
இது போன்று தொடர்ச்சியாக செயல்படும் போது நம்முடைய சிபில் ஸ்கோர் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது, குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவைக் கட்டணத்தை செலுத்துவது தான்.
அப்படி, செலுத்தும் போது மட்டுமே நம்முடைய சிபில் ஸ்கோர் அதிகரிக்கும். இல்லையென்றால், அது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.