உங்கள் கிரெடிட் வரம்பை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

உங்கள் கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாகவும், அடிக்கடி பயன்படுத்துவதும் நீங்கள் உங்கள் கிரெடிட்டை சரியாக நிர்வகிப்பதை கடன் வழங்குநர்களுக்கு எடுத்துக்காட்டும்.

உங்கள் கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாகவும், அடிக்கடி பயன்படுத்துவதும் நீங்கள் உங்கள் கிரெடிட்டை சரியாக நிர்வகிப்பதை கடன் வழங்குநர்களுக்கு எடுத்துக்காட்டும்.

author-image
WebDesk
New Update
How to choose credit card

நீங்கள் செலவு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை கிரெடிட் லிமிட் என்று அழைக்கப்படுகிறது. அதிக வரம்பைக் கேட்பது எளிதாக இருந்தாலும், நீங்கள் தயாராக இல்லாவிட்டால், அது அதிகப்படியான செலவு மற்றும் கடன் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

Advertisment

ஆனால், அதிக கிரெடிட் லிமிட் வைத்திருப்பது உங்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்கும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும் மற்றும் நீங்கள் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால், அவசரநிலைகளுக்காக உங்களை தயார்படுத்தும். 

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

உங்கள் தற்போதைய கிரெடிட் லிமிட்.

Advertisment
Advertisements

உங்கள் சராசரி மாத செலவு.

உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் (நீங்கள் கிரெடிட்டில் உண்மையில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்).

இவற்றை பொதுவாக உங்கள் கார்டு வழங்கும் நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கை, இணையதளம் அல்லது மொபைல் செயலியில் காணலாம்.

ஏன் அதிக கிரெடிட் லிமிட்டை கருத்தில் கொள்ள வேண்டும்?

அதிக கிரெடிட் லிமிட் வைத்திருப்பதால் பல நன்மைகள் உள்ளன:

இது உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (credit utilisation rate) குறைக்கிறது. இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பெரிய கொள்முதல், அவசரநிலைகள் மற்றும் விடுமுறை பயணங்களுக்கு உங்கள் வாங்கும் திறனை அதிகரிக்கிறது.

அதிக தொகைகளுடன் எதிர்கால கடன்களுக்கு தகுதி பெறும் உங்கள் திறனை அதிகரிக்கிறது.

உங்களுக்கு சிறந்த அம்சங்கள் மற்றும் ரிவார்டு திட்டங்களை வழங்குகிறது.

கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க எளிதான வழிகள்:

வலுவான கிரெடிட் வரலாறு: சரியாக திருப்பி செலுத்தும் வரலாறு கொண்ட கார்டுதாரர்களை கடன் வழங்குநர்கள் சாதகமாகப் பார்க்கிறார்கள். நீங்கள் சரியான நேரத்தில், முழுமையாக பணம் செலுத்துவதன் மூலம் கடன் தகுதியை நிரூபிக்கலாம்.

உங்கள் கார்டை தவறாமல் பயன்படுத்துங்கள்: உங்கள் கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாகவும், அடிக்கடி பயன்படுத்துவதும், நீங்கள் உங்கள் கிரெடிட்டை பயன்படுத்தி நிர்வகிப்பதை கடன் வழங்குநர்களுக்குக் காட்டும். முழு லிமிட்டையும் பயன்படுத்த வேண்டாம்.

6-12 மாதங்களுக்குப் பிறகு அதிகரிப்பைக் கோருங்கள்: உங்கள் கார்டு கிடைத்தவுடன், உடனடியாக பெரிய லிமிட்டைக் கேட்க வேண்டாம். முதலில் ஒரு வலுவான கட்டண வரலாற்றை உருவாக்க குறைந்தபட்சம் 6-12 மாதங்கள் கொடுங்கள்.

வருமான அதிகரிப்பை தெரிவிக்கவும்: உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலோ, வேலை மாறினாலோ அல்லது உங்கள் வருவாயை அதிகரிக்கும் பிற வருமான ஆதாரங்கள் கிடைத்தாலோ உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும். இது உங்கள் வரம்பு அதிகரிப்பு கோரிக்கையை அவர்கள் அங்கீகரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

அதிகப்படியான கோரிக்கைகள் வைக்க வேண்டாம்: இது சாதகமற்றதாகக் கருதப்படலாம். அதோடு, லிமிட்டில் 30% க்கும் குறைவாகவே பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அதிகப்படியான செலவு: உங்கள் லிமிட்டை அதிகரிக்கும்போது, அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே அவ்வாறு செய்ய வேண்டாம். இது ஒரு உணர்ச்சிபூர்வமான செயல் அல்ல, முன் திட்டமிட்ட செயலாக இருக்க வேண்டும்.

உங்கள் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க எப்படி கோருவது?

உங்கள் மொபைல் ஆப் அல்லது ஆன்லைன் பேங்கிங்கை அணுகலாம்.

உங்கள் வங்கிக்கு போன் செய்து வாடிக்கையாளர் சேவையுடன் பேசலாம்

உங்கள் சமீபத்திய வருமான சான்றுகளுடன் உங்கள் வங்கிக்குச் செல்லலாம்.

பெரும்பாலான வங்கிகள் உங்கள் கோரிக்கைகளை வருமான விவரம், கிரெடிட் ஸ்கோர், திருப்பி செலுத்தும் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றன.

Credit card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: