ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சம்பளம் பெறும் நபர்களின் ஆதார் எண்ணை அவர்களின் ஈபிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. கடந்த மாதம், வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிறுவனங்களை ஆதாரை யுஏஎனுடன் இணைக்க அவர்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு கூறியது. அவ்வாறு இணைக்கப்படாவிட்டால், மாதாந்திர வருங்கால வைப்பு நிதி வைப்புக்கள் அனுமதிக்கப்படாது.
ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த சமூக பாதுகாப்பு விதி, 2020 இன் பிரிவு 142 க்கு இணங்க இது செய்யப்பட இருந்தது. இப்போது, இந்த பிரிவின் விதிகள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
ஆதார் எண்ணை ஈபிஎஃப் யுஏஎனுடன் ஏன் இணைக்க வேண்டும்?
சமூக பாதுகாப்புக் குறியீட்டின் பிரிவு 142 ன் கீழ் இந்த இணைப்பு கட்டாயமாகும். உங்கள் ஆதார் எண்ணை உங்கள் UAN இல் இணைக்கும் வரை உங்கள் நிறுவனம் உங்கள் EPF கணக்கில் மாதாந்திர PF பங்களிப்புகளை டெபாசிட் செய்ய முடியாது. மேலும், இணைத்தல் முடியும் வரை நீங்கள் கடன்களை எடுக்கவோ அல்லது உங்கள் ஈபிஎஃப் கணக்கைத் திரும்பப் பெறவோ முடியாது.
ஈபிஎஃப் யுஏஎன்னில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
நீங்கள் அதை EPFO உறுப்பினர் போர்டல் மூலமோ அல்லது உங்கள் UAN ஐ செயல்படுத்தி கணக்கில் உள்நுழைய வேண்டும். உங்கள் UAN ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உங்கள் சுயவிவரம் குறிக்கும். இல்லையென்றால், மெனு பட்டியில் உள்ள ‘நிர்வகி’ என்பதற்குச் சென்று, ஆதார் எண்ணை இணைக்க ‘கே.ஒய்.சி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இந்த செயல்பாட்டின் போது ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை, ஆதார் மற்றும் ஈபிஎஃப் பதிவுகளில் பெயர்கள் அல்லது பிறந்த தேதிக்கு இடையில் பொருந்தாதது.
இருப்பினும், உங்கள் ஈபிஎஃப் யுஏஎன் பதிவுகளில் பிழைகள் அல்லது குறைகளை சரிசெய்வது ஒப்பீட்டளவில் எளிமையானது. பிரதான மெனுவில் உள்ள ‘எனது சுயவிவரத்திற்கு’ சென்று மாற்றங்களைச் செய்ய வேண்டும், இதன் மூலம் பிழைகளை எளிதாக நீக்கலாம். இந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, உங்கள் நிறுவனம் முதலில் போர்ட்டலில் மாற்றங்களை அங்கீகரிக்க வேண்டும், அதைத் தொடர்ந்து பிராந்திய ஈபிஎஃப்ஒ அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும்.
நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் என்ன?
நீங்கள் ஆதார் விவரங்களை சரிசெய்ய முயற்சிக்கும்போது, உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்யவில்லை என்றால், அருகில் உள்ள ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களில் சென்று மாற்றங்களை சரி செய்ய வேண்டும்.
ஆதார் விவரங்களை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள ஊழியர்களை வலியுறுத்த நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை. தனிநபர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குபவர்களுக்கு மட்டுமே ஆதார் தரவை அணுக முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil