Advertisment

இன்றே கடைசி; பான் எண் – ஆதார் இணைப்பது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி; ஆதாரை பான் எண்ணுடன் இணைப்பது எப்படி என்பது பற்றிய எளிய வழிமுறைகள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றே கடைசி; பான் எண் – ஆதார் இணைப்பது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

How to link aadhaar to PAN card simple steps: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதி என்ற நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

Advertisment

மார்ச் 31ஆம் தேதிக்குள் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் அட்டையை இணைக்காத வரி செலுத்துவோர் வியாழக்கிழமைக்குப் பிறகு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்குள் அல்லது ஜூன் 30, 2022க்குள் ஆதார் இணைக்கப்பட்டால் ரூ. 500 தாமதக் கட்டணம் விதிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகான ஆதார் இணைப்புக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பான் எண் செயலிழந்து விடும். மேலும் அபராதம் செலுத்திய பின்னரே பான் எண் மீண்டும் செயல்படும். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இன்றுவரை சுமார் 50 கோடி பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் பான் எண்ணை ஆதாருடன் எப்படி இணைக்கலாம் என்பது இங்கே.

வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்தில் பதிவு செய்த பயனாளர்கள் இணைப்பது எப்படி?

நீங்கள் ஏற்கனவே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தால், முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது நீங்கள் ஏற்கனவே ஆதார் மற்றும் பான் எண்ணைக் குறிப்பிட்டிருந்தால், உங்கள் பான் எண் ஆதாருடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆதார் மற்றும் பான் எண் விவரங்கள் ஏற்கனவே வருமான வரித் துறையுடன் இருப்பதால், வருமான வரித் துறையால் இணைக்கப்பட்டிருக்கலாம்.

வருமான வரி இ-ஃபைலிங் இணையதளமான www.incometaxindiaefiling.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் ஆதார் ஏற்கனவே உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

PAN (User ID) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு இணையதளத்தில் உள்நுழையவும். நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் கணக்கு திறந்ததும், உங்கள் பெயருக்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் 'சுயவிவர அமைப்புகள்' என்பதைக் கிளிக் செய்யவும். சுயவிவரம் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட விவரங்களைக் காட்டும்.

பதிவு செய்யாத பயனர்களுக்கு

இ-ஃபைலிங் இணையதளத்தில் பதிவு செய்யாதவர்கள் என்றால், உங்கள் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்க மற்றொரு வழி உள்ளது. புதிய வருமான வரி போர்ட்டலின் முகப்புப் பக்கத்தில் ஒரு ஹைப்பர்லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது: www.incometax.gov.in

இ-ஃபைலிங் இணையதளத்தில் 'லிங்க் ஆதார்' என்பதைக் கிளிக் செய்தால் போதும். நீங்கள் விவரங்களை உள்ளிட வேண்டிய ஒரு புதிய படிவம் தோன்றும். அதில் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதாரின் படி பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், 'ஆதார் அட்டையில் எனக்கு பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது' என்ற விருப்பத்தையும் நீங்கள் டிக் செய்ய வேண்டும். எனது ஆதார் விவரங்களை சரிபார்க்கவும் என்பதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். 'ஆதாரை இணை' என்பதைக் கிளிக் செய்யவும்.

வெற்றிகரமாகச் சமர்ப்பித்ததும், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளதைக் காட்டும் செய்தி உங்கள் திரையில் காட்டப்படும்.

SMS அனுப்புவதன் மூலம்

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அதன் ஜூன் 29, 2017 தேதியிட்ட அறிவிப்பில், மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைத் தவிர்த்து பான் மற்றும் ஆதாரை இணைக்க மற்ற முறைகளை வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

எளிய SMS அனுப்புவதன் மூலம் உங்கள் பான் மற்றும் ஆதாரை இணைக்கலாம். என்எஸ்டிஎல் இ-கவர்னன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் அல்லது யுடிஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் லிமிடெட் (யுடிஐஐடிஎல்) ஆகிய PAN சேவை வழங்குநர்களுக்கு நீங்கள் SMS அனுப்பலாம்.

567678 அல்லது 56161 க்கு ஒரு முக்கிய சொல்லைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

வடிவம்: UIDPAN<12 இலக்க ஆதார்><10 இலக்க PAN>

எடுத்துக்காட்டாக, உங்கள் ஆதார் எண் 112233445566 ஆகவும், பான் எண் AACPA9913L ஆகவும் இருந்தால், நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு கீழ்கண்டவாறு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்

UIDPAN 112233445566 AACPA9913L

இதற்கு NSDL மற்றும் UTI உங்களிடம் கட்டணம் வசூலிக்காது. இருப்பினும், மொபைல் ஆபரேட்டரால் விதிக்கப்படும் SMS கட்டணங்கள் பொருந்தும்.

ஒரு படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் நேரடியாக இணைத்தல் (இணைப்பு-I)

மேலே குறிப்பிட்டுள்ள அறிவிப்பின்படி, பான் எண் மற்றும் ஆதார் தரவுகளில் உள்ள பொருந்தாத சிக்கலை மற்ற முறைகள் மூலம் தீர்க்க முடியாமல் போனால், வரி செலுத்துவோர் பிரச்சினைகளை எளிதாக்க நேரடி இணைத்தல் முறையையும் CBDT வழங்கியுள்ளது.

நீங்கள் PAN சேவை வழங்குநர், NSDL அல்லது UTIITSL இன் சேவை மையத்தைப் பார்வையிடலாம். தேவையான ஆவணங்களுடன், அதாவது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் 'இணைப்பு-I' படிவத்தை நீங்கள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் சேவைகளைப் போலன்றி, இந்த சேவை இலவசம் அல்ல. ஒரு தனிநபர் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். இணைக்கும் போது, ​​PAN அல்லது ஆதார் விவரங்களில் திருத்தம் செய்யப்படுகிறதா என்பதைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

PAN விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய, கட்டணம் ரூ.110. மறுபுறம், ஆதார் விவரங்களைத் திருத்த, நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.50.

பான் எண் மற்றும் ஆதார் தரவுகளில் விவரங்கள் சரியாக இல்லாமல் இருந்தால் பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாகும்.

கவனிக்க வேண்டியவை

ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தினால், உங்கள் பான் கார்டில் உங்கள் பெயர் பொருந்தவில்லையென்றாலும், உங்கள் பிறந்த தேதியும் பாலினமும் பொருந்தியிருந்தால் ஆதார் OTP உருவாக்கப்படும். பதிவுசெய்யப்பட்ட/ஆன்லைனில் உள்ளிடப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இணைக்கும் செயல்முறையைத் தொடரவும் முடிக்கவும் அந்த OTPயை ஆன்லைனில் உள்ளிட வேண்டும்.

பான் எண் மற்றும் ஆதார் தரவுகளில் விவரங்கள் ஒன்றாக இல்லாத பட்சத்தில் இரண்டு எண்களையும் இணைக்க முயற்சிக்கும் முன் அதை சரி செய்து கொள்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pan Card Aadhaar Card Business Aadhar Pan Link
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment