Advertisment

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்

எளிமையான முறையில் இரண்டு நிமிடங்களில் இந்த வேலை முடிந்துவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to download e pan

பான் கார்டு

pan card aadhar card link : ஆதார் எண்ணுடன் பான் பார்ட் எண்ணை இணைப்பதால், எதிர்காலத்தில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் போதும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருக்கும்.

Advertisment

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் அடையாள அட்டை கார்டை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதற்கான இறுதி கெடு இன்று ( மார்ச் 31-ம் தேதி) என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

pan card aadhar card link - easy guide

இவ்விதம் இணைக்காதவர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. மேலும் பான் எண்ணையும் ரத்து செய்யவும் முடியாது. நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு பல்வேறு கட்டங்களில் கால அவகாசம் வழங்கப்பட்டது.  மேலும் எப்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி?

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உங்கள் மொபைல் ஃபோனில் 'UIDPAN' <12-digit Aadhaar> <10-digit PAN> என தட்டச்சு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் உதாரணம்: UIDPAN 111122223333 ABCD1234E.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?

பான் காடுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். இதற்கு incometaxindia.gov.in என்ற இணைப்பிற்குச் சென்று பின் வருமாறும் செய்ய வேண்டும்.

வருமான வரித் துறையின் incometaxindia.gov.in இணையதளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பின்னர் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து ‘Link Aadhaar' என்ற தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.

இனியாவது கவனமாய் இருங்கள்!.. இந்த இடங்களுக்கு மறக்காமல் பான் கார்டு கொண்டு செல்லுங்கள்!

பின்னர் அங்கு கேட்கப்படும் விவரங்களை அளித்து captcha என அழைக்கப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு ‘sumbit’ என்ற பொத்தானை கிளிக் செய்டும் போது இணைப்பு முழுமை அடையும்.

மேலும் படிக்க : ஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பேன் கார்டு இணைப்பது எப்படி?

Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment