SBI Bank Tamil News: உங்களது பான் கார்டை ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் இணைப்பது ஒரு முக்கியமான படியாகும். இதைச் செய்யத் தவறினால், உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்குடன் உங்கள் பான் கார்டை இணைக்கவில்லை என்றால், அதற்கான எளிய வழிகளை இங்கு வழங்கியுள்ளோம். அவற்றை இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
எஸ்பிஐ வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல் மூலம் பான் பான் கார்டை இணைப்பது எப்படி?
படி 1: http://www.onlinesbi.com என்கிற இணைய பக்கத்தில் உள்நுழையவும்.
படி 2: பின்னர் அங்கு தோன்றும் “எனது கணக்குகள்” (My Accounts) என்பதன் கீழ் “சுயவிவர-PAN பதிவுக்கு” (Profile-PAN Registration) செல்லவும்.
படி 3: அடுத்த பக்கத்தில், கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, பான் எண்ணை உள்ளிட்டு கிளிக் செய்யவும்
இப்போது சமர்ப்பிக்கவும்.
படி 4: உங்கள் கோரிக்கை செயலாக்கத்திற்காக கிளைக்கு அனுப்பப்படும்.
படி 5: கிளை உங்கள் கோரிக்கையை 7 நாட்களில் செயல்படுத்தும்.
படி 6: மேப்பிங்கின் நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
குறிப்பு: நீங்கள் இன்னும் இன்டர்நெட் பேங்கிங்கில் பதிவு செய்யவில்லை என்றால், உங்கள் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய, https://retail.onlinesbi.com/retail/userdrivenregdetailswin.html என்கிற பக்கத்திற்கு செல்லவும்.
எஸ்பிஐ கிளை மூலம் பான் எண்ணை எவ்வாறு இணைப்பது?
படி 1: உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் செல்லவும்
படி 2: செல்லும் போது கூடவே உங்கள் பான் கார்டின் நகலை எடுத்துச் செல்லுங்கள்.
படி 3: பின்னர் அங்கு கோரிக்கை கடிதத்தை நிரப்பவும்.
படி 4: மேலே உள்ளவற்றை பான் கார்டின் ஜெராக்ஸ் நகலுடன் சமர்ப்பிக்கவும்.
படி 5: தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, இணைப்பு கிளை மூலம் செய்யப்படும்.
படி 6: இணைப்பின் நிலை குறித்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றைப் பெறுவீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil