PAN Aadhaar Linking: ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கான கடைசி தேதி 2022, மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், ஓராண்டு வரை ஆதான் -பான் கார்டை அபராதத்துடன் இணைத்திட மத்திய அரசு அனுமதிக்கிறது. ஒருவேளை, நீங்கள் இப்போதும் தவற விடும் பட்சத்தில், உங்கள் பான் கார்டு செயலிழிந்து போய்விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைக்க தவறியவர்கள் ஏப்ரல் 1, 2022 தேதியிருந்து ஜூன் 30, 2022 வரை பான் ஆதார் அட்டையை இணைத்தால் 500 ரூபாய் அபராதமும், இந்த இடைப்பட்ட மூன்று மாதத்துக்குப் பிறகு, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்தால் 1,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் - பான் கார்டு இணைப்பது எப்படி?
- முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ தளம் www.incometax.gov.in செல்ல வேண்டும்.
- அதில், quick links ஆப்ஷனில் Link Aadhaar கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து தோன்றும் திரையில், பான் நம்பர், ஆதார் எண், பெயர், மொபைல் நம்பர் பதிவிட வேண்டும்.
- விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு, 'I validate my Aadhaar details' ஆப்ஷன் சேலக்ட் செயது, Continue ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் ரெஜிஸ்டர் செய்த நபருக்கு, one time password அனுப்பப்படும். அதனை கேட்கும் இடத்தில் டைப் செய்து, Validate கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து, அபராத தொகையை செலுத்தியபின், பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil