/tamil-ie/media/media_files/uploads/2021/01/aadhar-card-.jpg)
இன்றைய காலத்தில் ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது. இது ஒரு அரசு வழங்கும் அடையாள அட்டை மட்டுமல்ல, மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பெரும்பகுதியை வைத்துள்ளது. இவை வங்கிக் கணக்குகள், ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் அரசின் அனைத்து திட்டங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அது மோசடி செய்பவர்களால் அணுகப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி மற்றும் நிதி மோசடிகளின் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ஒருவர் தனது ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
எந்தவொரு சேவைக்கும் நீங்கள் அதைப் பயன்படுத்தாத சமயங்களில் உங்கள் ஆதார் அட்டையை இப்போது லாக் செய்யலாம். உங்கள் ஆதார் அட்டையை எந்தவொரு சேவைக்கும் பயன்படுத்தத் திட்டமிடும்போது அதைத் திறக்க இந்த வசதி உங்களை அனுமதிக்கிறது.
Lock/Unlock செய்வது எப்படி?
https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்லவும்.
’Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ’Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும்
UID பட்டனை செலெக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும்.
Send OTP' என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.
இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும்.
மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகிவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.