Advertisment

நீண்ட கால கடன்களை அடைக்க.. பணத்தை நிர்வகிப்பது எப்படி?

கிரெடிட் கார்டு நிலுவைகள் சரியான நேரத்தில் கட்டப்படாவிட்டால் கடன் சுமையை மேலும் அதிகரித்துவிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to avoid delays in paying EMI

உங்களிடம் போதுமான பணம் இல்லையென்றாலும், இருந்தாலும் பணம் செலுத்த வேண்டிய தேதிகளுக்கு நினைவூட்டல்களை அமைப்பது ஒரு நல்ல பழக்கம்.

தனிப்பட்ட நிதியில் சேமிப்பு மட்டும் பிரதானமல்ல. மாறாக செலவுகளை எப்படி நிர்வகிப்பது என்ற கலையும் அடங்கியுள்ளது. ஏனெனில் உங்கள் வருமான வரம்புக்குள் செலவுகளை வைத்துக் கொண்டால் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
ஒருவேளை கடன் வாங்க வேண்டியிருந்தால் மிகவும் கவனமாக நமது சொத்துக்களின் மதிப்பை விட மீறாத வகையில் வாங்க வேண்டும்.

Advertisment

இவ்வாறு தனிப்பட்ட நிதியை கையாளுவதில் பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வகையில் ஒரு நபர் சொத்துக்களை விட பொறுப்புகளை குறைவாக வைத்திருக்கும்பட்சத்தில் அவருக்கு நிகர மதிப்பு அதிகமாக இருக்கும்.
இதனை தக்க வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். ஏனெனில் நிதி சரியான முறையில் செலவிடப்படாவிட்டால் கடனில் மூழ்கில் சூழல் ஏற்படும்.

இதனை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடன்களை முதலில் பிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

  1. நீண்ட கால கடன்கள்

இந்தப் பட்டியலில் வாகனம் மற்றும் வீட்டுக் கடன்கள் வருகின்றன. இந்தக் கடன்கள் குறைந்தப்பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிச்சயமாக இருக்கும்.
இந்தக் கடன்கள் முடிவும்போது நமக்கு சொத்து கிடைக்கிறது. எனவே நீண்ட கால வேலைவாய்ப்பை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கடன்களை பெறலாம்.

  1. கிரெடிட் கார்டு நிலுவைகள்

இது மிகவும் மோசமான கடன் ஆகும். ஏனெனில் நீங்கள் சரியாக திருப்பி செலுத்தாவிட்டால், அதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும். இதன் வட்டி வீதங்கள் உங்களது பொருளாதார ஆதாரத்தை பாதிக்கலாம்.

பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள்
இந்தக் கடன்கள் பெரும்பாலும் குறுகிய கால கடன்களாக இருக்கும். எனினும் வட்டி அதிகமாக காணப்படும். இதனை சரியாக கட்டாவிட்டாலும் நிதி நிலையை சரமாரியாக பாதிக்கும்.

ஆகையால் முதலில் கடன்களில் இருந்து விடுபட ஒரு செயல் திட்டத்தை உருவாக்குங்கள். சிறிய கடன்களை அடைக்க பாதுகாப்பற்ற கடன்கள் வாங்குவதை தவிருங்கள்.
அதற்கு பதிலாக நீங்கள் உபயோகமற்ற பொருள்கள் என நினைக்கும் பொருள்களை விற்கலாம். மேலும் சேமிப்பு பழக்கத்தை அதிகரித்து செலவுகளை குறைக்க முயலுங்கள்.
இது நீண்ட காலம் கடைப்பிடிக்கும்போது உங்களது சேமிப்ப ஒருபுறம் கூடும். மறுபுறம் நீண்ட கால கடன்கள் கூட எளிதில் அடைப்பட்டுவரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Credit Growth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment