Post office savings scheme | SCSS | மத்திய அரசால் ஆதரிக்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வூதியதாரர்களிடையே மிகவும் விருப்பமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் செய்யப்படும் முதலீடுகளுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் தனிநபர் ஒருவர் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த நிலையில், ரூ.30 லட்சம் வரம்பிற்குள் பல SCSS கணக்குகளைத் திறக்க முடியுமா? என்பது குறித்து பார்க்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம். திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதனை 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யலாம்.
பல கணக்குகளை திறக்கலாமா?
ஒரு டெபாசிட் செய்பவர் சில விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட (SCSS) கணக்குகளை திறக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
திட்டத்தை தொடங்குவது எப்படி?
மூத்த குடிமக்கள் SCSS கணக்குகளை வங்கி அல்லது தபால் அலுவலக கிளையிலும் ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து (படிவம்-A) தொடங்கலாம்.
இந்த விண்ணப்பப் படிவத்துடன், ஃபார்ம்-டியுடன், பே-இன்-ஸ்லிப், மூத்த குடிமகனின் வயதுச் சான்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒருமுறை முதலீடு செய்தால், வட்டி விகிதம் SCSS-ன் காலத்திற்கு அதாவது 5 ஆண்டுகளுக்கு நிலையானதாக இருக்கும். வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்தப்படும் மற்றும் முழுமையாக வரி விதிக்கப்படும். இந்தத் திட்டம் முதிர்வுக்கான வட்டியை வழங்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“