/indian-express-tamil/media/media_files/2025/06/11/qqhJORr6lcpa8kypjypx.jpg)
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பிற பத்திரங்களில் முதலீடு செய்ய அல்லது வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, டிமேட் கணக்கு அத்தியாவசியமாகும். இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் டிஸ்கவுண்ட் புரோக்கரேஜ் நிறுவனங்களில் ஒன்றான ஸேரோதா (Zerodha), புதிய டிமேட் கணக்கை திறப்பதற்கும், ஆன்லைனில் வர்த்தகம் செய்வதற்கும் ஒரு சுலபமான செயல்முறையை வழங்குகிறது.
இது தொழில்முறை மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இருவருக்கும் ஏற்றது. டிமேட் கணக்கை திறக்கும் முழு நடைமுறையும் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.
பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி அறிக்கைகள் மற்றும் பிற தேவையான ஆவணங்கள் போன்ற அனைத்தையும் சேகரித்தால் இதற்கு போதுமானதாக இருக்கும்.
கணக்கு தொடங்குவதற்கான வழிமுறைகள்:
ஸேரோதாவின் அதிகாரப்பூர்வ கணக்கு திறப்பு போர்ட்டலுக்குச் செல்லவும்.
உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். இரண்டையும் OTP மூலம் சரிபார்க்கவும்.
உங்கள் பான் கார்டு விவரங்கள், ஆதார் விவரங்கள் மற்றும் சரியான பிறந்த தேதியை வழங்கவும்.
வங்கி ஆதாரத்தை (ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது அறிக்கை) பதிவேற்றி, இ-கையொப்ப செயல்முறையை முடிக்கவும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்து, சரிபார்ப்புக்கு காத்திருக்கவும். பொதுவாக, வேலை நாட்களில் 24 முதல் 48 மணிநேரத்திற்குள் கணக்கு உள்நுழைவு விவரங்கள் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டியவை:
பான் கார்டு.
ஆதார் அட்டை (மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்).
வங்கி ஆதாரம் (ரத்து செய்யப்பட்ட காசோலை, வங்கி அறிக்கை அல்லது பாஸ்புக்).
வருமான ஆதாரம் (டெரிவேடிவ்ஸ்/F&O வர்த்தகத்தைத் தேர்வு செய்தால் மட்டுமே).
நீலம் அல்லது கருப்பு மையால் ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம்.
கட்டணங்கள், கணக்கு வகைகள் மற்றும் கூடுதல் அம்சங்கள்:
தனிநபர்களுக்கான ஆன்லைன் கணக்கு திறப்பிற்கு ஸேரோதா ரூ. 200 கட்டணம் வசூலிக்கிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணங்கள் (AMC) இருப்புக்களைப் பொறுத்து ரூ. 0 முதல் ரூ. 300 வரை இருக்கும். தனிநபர் அல்லாத கணக்குகளுக்கு, ரூ. 500 ஆகும். மேலும் AMC ஆண்டுக்கு ரூ. 300 முதல் ரூ. 1,000 வரை இருக்கும். மேலும், BSDA வைத்திருப்பவர்கள் தங்கள் இருப்புக்களை பொறுத்து குறைக்கப்பட்ட அல்லது பூஜ்ஜிய AMC-க்கு தகுதி பெறலாம்.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கட்டணங்களுக்கு ஸேரோதாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.