கிசான் விகாஸ் பத்ரா நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் முதலீட்டாளர்களால் விரும்பப்படும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் இந்தத் திட்டம் முதிர்வு காலத்தின் முடிவில், சந்தை ஏற்ற இறக்கத்தைப் பொருட்படுத்தாமல், முதலீட்டுப் பணத்தை உத்தரவாதமாக இரட்டிப்பு மதிப்புடன் பெறுவதை உறுதி செய்கிறது.
கிஷான் விகாஸ் பத்ரா வட்டி
கிஷான் விகாஸ் பத்ரா கணக்குகளுக்கு கடந்த காலங்களில் 7 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. தற்போது, அரசாங்கம் 7.2 சதவீதமாக வட்டியை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் பணம் 120 மாதங்களில் இரட்டிப்பு ஆகிறது. இந்தத் திட்டத்தில் மைனர் பாதுகாவலர் ஒருவரை நியமித்து முதலீடு செய்யலாம். அதாவது தனிநபர் கணக்கு தவிர, ஏ, பி வகை கணக்குகளும் உள்ளன.
போஸ்ட் ஆபிஸ் இன்டர்நெட் பேங்கிங் மூலம் கேவிபியை ஆன்லைனில் திறப்பது எப்படி?
- DOP இணைய வங்கியில் உள்நுழையவும்.
- 'பொது சேவைகள்', 'சேவை கோரிக்கைகள்', 'புதிய கோரிக்கைகள்' என்பதன் கீழ் நுழையவும்
- NSC கணக்கை கிளிக் செய்யவும். KVP கணக்கைத் திறக்க NSC கணக்கையும் KVP கணக்கையும் திறக்கவும்.
- என்எஸ்சி திறக்கப்பட வேண்டிய தொகை குறைந்தபட்சம் ரூ 1000 ஆகும். தொடர்ந்து 100ன் மடங்கில் முதலீடு செய்யலாம்.
- டெபிட் கணக்கு இணைக்கப்பட்ட PO சேமிப்பு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும் 'இங்கே கிளிக் செய்யவும் (Click Here)' என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
- பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
- ‘கணக்குகள்’ என்பதன் கீழ் திறக்கப்பட்ட என்எஸ்சியின் விவரங்களைப் பார்க்க மீண்டும் உள்நுழையவும்.
கிசான் விகாஸ் பத்ராவிற்கு 2 ஆண்டுகள் 6 மாதங்கள் லாக் இன் காலம் உள்ளது. 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு முன் முன்கூட்டியே மூடுவதும் அனுமதிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“