post-office-savings-scheme | மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் ஏப்ரல் 1, 2023ஆம் தேதிமுதல் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நிதிப் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்கிறது. இத்திட்டம் மத்திய அரசால் 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
வட்டி விகிதம்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதிர்ச்சி வருவாய்
ஃபிக்ஸட் டெபாசிட் தொகை டெபாசிட் செய்த தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. அப்போது, கணக்கு வைத்திருப்பவர் அஞ்சல அலுவலகத்தில் படிவம்-2-ஐ சமர்பிப்பதன் மூலம் ரிட்டன் பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சலகத்தில் கணக்கு தொடங்குவது எப்படி?
1) தபால் அலுவலகத்துக்கு செல்லவும்
2) கணக்கு திறப்பு விண்ணப்பத்தை நிரப்பி சமர்பிக்கவும்
3) ஆவணச் சான்றாக ஆதார், பான் கார்டு ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
4) டெபாசிட் பணத்தை செக் ஆக அஞ்சலகத்தில் முதலீடு செய்யலாம்.
5) படிவத்தில் நாமினியை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்.
ரூ.2 லட்சம்
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் தன் சார்பாகவோ அல்லது மைனர் பெண் குழந்தையின் சார்பாகவோ பாதுகாவலரால் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 1000ல், ரூ.100ன் மடங்குகளில் கணக்கைத் தொடங்கலாம்.
ஒரு தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.2,00,000/-க்கு உட்பட்டு 3 மாதங்களில் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“