பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுதோறும் 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
இந்தப் பி.பி.எஃப் (PPF) கணக்கை தபால் அலுவலகத்தில் திறக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி (SBI) போன்ற சில வங்கிகளும் கூட PPF கணக்கைத் திறக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. இந்தத் திட்டத்தை ஆன்லைனிலும் திறக்கலாம்.
எஸ்.பி.ஐ பி.பி.எஃப் (PPF) கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?
1) உங்கள் SBI ஆன்லைன் கணக்கில் உள்நுழையவும்
2) 'Request and enquiries' பக்கத்தை கிளிக் செய்யவும்
3) 'புதிய PPF கணக்குகள்' விருப்பத்தை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
4) நீங்கள் ‘புதிய PPF கணக்கு’ பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். PAN (நிரந்தர கணக்கு எண்) உள்ளிட்ட தற்போதைய வாடிக்கையாளர் விவரங்கள் இந்தப் பக்கத்தில் காட்டப்படும்.
5) நீங்கள் ஒரு மைனர் பெயரில் ஒரு கணக்கைத் திறக்க விரும்பினால், அந்தப் பக்கத்தில் தகவல்களை அளிக்க வேண்டும்.
6) மைனர் பெயரில் கணக்கு திறக்கப்படாவிட்டால், உங்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்க விரும்பும் கிளைக் குறியீட்டை நிரப்ப வேண்டும்.
7) உங்கள் தனிப்பட்ட விவரங்கள் முகவரி மற்றும் நியமனம் சரிபார்க்கப்பட வேண்டும். சரிபார்க்கப்பட்டதும் ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
8) 'உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது' என்று வரும். அதில் ஆதார் குறித்த தகவல்கள் இருக்கும்.
9) இப்போது நீங்கள் கொடுக்கப்பட்ட ஆதார் எண்ணுடன் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
10) ‘PPF ஆன்லைன் விண்ணப்பத்தை அச்சிடுங்கள்’ என்ற தாவலில் இருந்து பிரிண்ட் செய்து 30 நாட்களுக்குள் KYC ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் கிளைக்கு செல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“