ஐஓபி இணையதள வங்கி சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?

Indian Overseas Bank: விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பிறகு உங்கள் இணையதள வங்கி சேவை கணக்கு வங்கியால் செயல்படுத்தப்படும்

By: March 15, 2020, 6:59:13 PM

IOB Updates: ஆன்லைன் பண பரிவர்த்தனை செயல்முறைகளை பயன்படுத்துவதை எளிதாக்குவதன் மூலம் பாரம்பரிய வங்கி அமைப்புகளை இணையதள வங்கி சேவை மேம்படுத்தியுள்ளது. பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்வது முதல் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது வரை ஒருவரால் பல்வேறு விஷயங்களை இணையதளத்தை பயன்படுத்தி இப்போது செய்ய முடியும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (ஐஓபி) இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இணையதள வங்கி சேவையை வழங்குகிறது. நீங்கள் ஐஓபி வாடிக்கையாளரா அப்படியென்றால் ஐஓபி வங்கியின் இணையதள வங்கி சேவையின் பயன்களைப் பயன்படுத்த நீங்கள் முதலில் ஐஓபி இணையதள வங்கி சேவையில் பதிவு செய்ய வேண்டும்.

ஐஓபி இணையதள வங்கி சேவைக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

வீட்டில் இருந்தே சேவிங்ஸ் அக்கவுண்டை ஓபன் பண்ணலாம் – எஸ்பிஐ வங்கி அசத்தல்

www.iobnet.co.in. என்ற இணையதள முகவரியில் உழ்நுழையவும்.

தனிநபர் அல்லது proprietary firm ஆக இருந்தால் தனிநபர் பதிவு (Register Individual) என்பதை சொடுக்கவும். அல்லது பெருநிறுவன பதிவு (Register Corporate) என்பதை சொடுக்கவும்.

ஒருமுறை நீங்கள் பதிவு செய்த பிறகு, உங்கள் விண்ணப்ப படிவத்தை உங்கள் சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளையில் சமர்பிக்கவும்.

இணையதள வங்கி சேவையை பெற செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி தேவை.

அனைத்து நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ள PIN எண்ணை எழுதி வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பிறகு உங்கள் இணையதள வங்கி சேவை கணக்கு வங்கியால் செயல்படுத்தப்படும்.

ஐஓபி வங்கி இணையதள சேவையில் உழ்நுழையும் செயல்முறை

உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தி உழ்நுழையவும்

கடவுச்சொற்கள் case sensitive என்பதை கவனத்தில் கொள்ளவும்.

உங்களுடைய உழ்நுழையும் கடவுச்சொல் மற்றும் பரிவர்த்தனை PIN ஆகியவை வெவ்வேறானவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடவுச்சொல் உழ்நுழையவும், PIN நிதி பரிமாற்றத்துக்கும் பயன்படக்கூடியது.

உங்கள் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். தொடர்ச்சியாக கடவுச்சொல்லை தவறாக உள்ளீடு செய்தால் உங்கள் இணையதள வங்கி சேவை முடக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:How to register on iob internet banking know steps here

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X