scorecardresearch

ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல்; ஆன்லைனில் 10 நிமிடத்தில் செய்யலாம்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

உங்களது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரை ஆன்லைன் மூலம் எளிதாக நீக்கவதற்கான வழிமுறைகள் இங்கே

ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல்; ஆன்லைனில் 10 நிமிடத்தில் செய்யலாம்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

How to remove name in Ration card from online simple steps: உங்களது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரை ஆன்லைன் மூலம் எளிதாக நீக்கலாம். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் ஒரு மிக முக்கிய ஆவணம் குடும்ப அட்டை அல்லது ரேஷன் கார்டு.  நாட்டின் குடிமக்களுக்கு மானிய விலையில் உணவு மற்றும் இதர பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க இந்த குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ரேஷன் கார்டு நாடு முழுவதும் முக்கிய அடையாள சான்றாகவும் உள்ளது.

உங்கள் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினரின் பெயரை நீக்க வேண்டுமானால் எளிமையான முறையில் ஆன்லைனில் செய்யலாம். மேலும், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை நீக்குதல் அல்லது சேர்த்தல் ஆகியவற்றையும் ஆன்லைன் மூலம் நீங்களே செய்யலாம். இதற்காக நீங்கள் அரசு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை.

இந்த செயல்முறைகளைச் செய்ய தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டைப் பெறலாம். 

1. ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

2. இப்போது ’பயனாளர் நுழைவு’ என்பதை க்ளிக் செய்யவும்.

3. பிறகு, ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். அடுத்ததாக, கேப்ட்சா (Captcha) எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, ’பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும்.

4. பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, ’பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும்.

5. குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர் அல்லது சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா போன்ற விவரங்கள் இப்போது காண்பிக்கப்படும்.

6. பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் ’அட்டை பிறழ்வுகள்’ என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு `புதிய கோரிக்கை’ என்பதை க்ளிக் செய்யவும்.

7. குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், ’சேவையை தேர்வு செய்யவும்’ என்பதை க்ளிக் செய்யவும்.

8. கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் ’குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும்.

9. குறிப்பிட்ட நபரை எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்பதன் காரணத்தைக் குறிப்பிடவும்.

10. திருமணம், இறப்பு போன்ற எந்த காரணத்திற்காக குடும்ப உறுப்பினரின் பெயரை எதனால் நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான ’ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்’ என்பதை க்ளிக் செய்யவும்.

உதாரணமாக, திருமணம் காரணமாக பெயர் நீக்க வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்டவரின் திருமணச் சான்றிதழ் அவசியம். ’திருமணச் சான்றிதழ்’ என்பதை தேர்வு செய்த பிறகு, choose file என்பதை க்ளிக் செய்து, திருமண சான்றிதழை அப்லோடு செய்யவும். சான்றிதழ் 1 MB அளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

11. பின்னர், ’உறுதிப்படுத்துதல்’ என்பதை டிக் செய்து, ’பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்யவும்.

பிறகு 2-3 நாள்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். பெயர் நீக்கம் செய்யப்பட்டதை மேற்கண்ட இணையதளப் பக்கத்திற்குச் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: How to remove name in ration card from online simple steps