ஒரு குழந்தையின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க சிறந்த கல்வியை அளிப்பது அவசியம். இதற்கான பெற்றோர் கடும் முயற்சிகளை எடுக்கின்றனர்.
சிறிய சேமிப்புகளில் முதலீடு செய்யலாமா எனத் திட்டமிடுகின்றனர். எனினும் தற்போதைய காலகட்டத்தில் உள்ள பணவீக்கத்துக்கு ஏற்ப அவர்களால் சேமிக்க முடிவதில்லை.
1) திட்டமிடல்
குழந்தையின் கல்விக்கான முதலீடுகளைத் திட்டமிடும்போது, அக்குழந்தை எந்த வகையான கல்வியைத் தொடர விரும்புகிறது. அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றி சிந்தித்தல் அவசியம்.
2) காலம்
முதலீடு என்று வரும்போது, எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ அவ்வளவு நல்லது. முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலம், உங்கள் செல்வத்தை அதிகரித்து அதிகபட்ச பலனை பெறலாம்.
3) சரியான முதலீடு
ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக முதலீடு செய்யும் போது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
குழந்தைகளின் கல்வி என்று வரும்போது, பணவீக்கத்தை முறியடிக்கும், வரி சேமிப்பு வழங்கும் முதலீட்டை நீங்கள் தேட வேண்டும். தவறான முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது உங்கள் இலக்கை இழக்க வழிவகுக்கும்.
4) முதலீட்டு மதிப்பாய்வு
குழந்தைகளின் கல்வி போன்ற சில இலக்குகள் உள்ளன, அவை காலப்போக்கில் உருவாகலாம். எனவே, அத்தகைய இலக்குக்காக முதலீடு செய்யும் போது, உங்கள் முதலீட்டு உத்தியை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது முக்கியம்.
அது உங்கள் இலக்குடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5) முதலீட்டு பாதுகாப்பு
நிச்சயமற்ற தன்மைகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், ஆனால் அவை உங்கள் இலக்குகளையோ அல்லது உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையோ சிதைக்க விடக்கூடாது. ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீடு இரண்டு இன்றியமையாத காப்பீடுகள் ஆகும். அவை உங்களையும் உங்கள் முதலீடுகளையும் பேரிடரை எதிர்கொண்டு பாதுகாக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“