The financial needs of your loved one this New Year: பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகள், நிதி நெருக்கடிகள், குழப்பமான சூழல்களுக்கு மத்தியில் கொரோனா தொற்றில் மேலும் ஒரு புதிய ஆண்டுக்குள் நாம் அனைவரும் அடியெடுத்து வைத்துள்ளோம். ஒரு மருத்துவக் காப்பீட்டு தேவை எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு நன்றாக உணர்த்தியது இந்த கொரோனா காலம். வரும் காலங்களில் பல்வேறு நிதி தட்டுப்பாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க எத்தகைய திட்டங்களை நாம் செயல்படுத்தலாம் என்பதை விவரிக்கிறது இந்த நிதிசார் செய்தி. இந்த ஆண்டில் உங்களின் மனதிற்கு நெருங்கியவர்களுக்கு அன்பளிப்பாக ஏதேனும் வழங்க விரும்பினால் இந்த திட்டங்கள் கட்டாயம் கை கொடுக்கும்.
ஸ்டாக்ஸ்
நல்ல நிலையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது மிகச்சிறந்த தேர்வாகும். நீங்கள் நேரடியாக அந்த பங்குகளை நீங்கள் யாருக்கு அன்பளிப்பாக தர விரும்புகின்றீர்களோ அவர்களின் பெயர், டிமெட் கணக்கு எண் மற்றும் பங்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை மாற்றிவிட இயலும்.
மியூச்சுவல் பண்டுகளில் SIP
மியூச்சுவல் ஃபண்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் இதில் முதலீடு செய்யலாம். இது நீண்ட கால முதலீட்டு திட்டம் என்பதால் நீண்ட நாள் கனவுகளை அவர்கள் அடைய இது உதவும்.
பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் SIP
ப.ப.வ. நிதி என்று வழங்கப்படும் இந்த நிதித்திட்டங்களில் நீங்கள் தங்கம், கடன் மற்றும் இதர திட்டங்கள் SIP முதலீட்டை தேர்வு செய்யலாம். இந்த கருவிகளை இரண்டாம் நிலை சந்தையில் எளிதாக வாங்கலாம் மற்றும் விற்கலாம் மற்றும் இதன் நிர்வாக கட்டணங்களும் மிகவும் குறைவே.
காப்பீட்டு திட்டங்கள் (Insurance Policy)
காப்பீட்டு திட்டங்கள் ஒரு குடும்பத்தை பாதுகாக்க இந்த சமயங்களில் மிகவும் இன்றி அமையாத தேவையாக உள்ளது. மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தகுதியான மருத்துவ பாலிசியில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
SEBI Registered Investment Advisor (RIA) - சந்தா
பங்கு சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் அதிக கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டிய பகுதிகளாகும். ஆனால் முறையான ஆலோசனையை நிபுணர்களிடம் இருந்து பெறும்போது உங்களின் கவலைகள் வெகுவாக குறைக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் ஆலோசனை என்பது குறிப்பாக நிதி தொடர்பான ஆலோசனை என்பது குறித்த பார்வை சற்று குறைவாகவே உள்ளது. எனவே இந்த சந்தாவை பெற்றுக் கொடுத்தால் தங்களின் நிதிசார் தேவைகளை ஆலோசனைகளை சந்தேகங்களை ஒருவர் எளிதில் நிபுணர் உதவியுடன் பெற்றுக் கொள்ள முடியும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil