உங்களது மாதாந்திர அல்லது பிற கட்டணங்களை தானாகவே செலுத்தும் வகையில் UPI ஆட்டோபேவை அமைக்க விரும்பினால், அதை எவ்வாறு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
நீங்கள் வழக்கமாகச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் இருந்தால், UPI ஆட்டோபே அமைப்பது உதவியாக இருக்கும். UPI ஆட்டோபே மூலம், மொபைல் பில்கள், மின்சார பில்கள், EMI கட்டணம், பொழுதுபோக்கு அல்லது OTT சந்தாக்கள், காப்பீடு, பரஸ்பர நிதிகள் மற்றும் கடன் செலுத்துதல், மெட்ரோ கட்டணங்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற எந்தவொரு தொடர்ச்சியான கட்டணங்களுக்கும் ரூ.5000 வரை UPI பயன்பாட்டை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் தானாக கட்டணம் செலுத்துமாறு அமைக்கலாம். ஆனால் கட்டணத் தொகை ரூ. 5000 ஐ தாண்டினால் நீங்கள் UPI கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டி வரும்.
UPI ஆட்டோபே வசதியுள்ள சில வங்கிகள், வணிகர்கள் மற்றும் திரட்டிகள் ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, HDFC வங்கி, HSBC வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவையாகும். கூகுள் பே, அமேசான் பிரைம், அக்கோ ஜெனரல், எஸ்பிஐ ஏஎம்சி போன்றவை விரைவில் UPI ஆட்டோபேவுடன் வர உள்ளது.
UPI ஆட்டோபே – வசதியை பயன்படுத்துவது எப்படி?
எந்தவொரு UPI- இயக்கப்பட்ட பயன்பாடும் ‘ஆணை’ (Mandate) பிரிவைக் கொண்டிருக்கும், இதன் மூலம் நீங்கள் தானாக-பற்று (auto-debit) ஆணையை உருவாக்கலாம், மாற்றலாம், இடைநிறுத்தலாம் மற்றும் திரும்பப் பெறலாம்.
ஆணைப் பிரிவு உங்கள் குறிப்பு மற்றும் பதிவுகளுக்கான கடந்த கட்டளைகளைப் பார்க்க அனுமதிக்கும். UPI பயனர்கள் UPI ID, QR ஸ்கேன் மூலம் மின் ஆணை உருவாக்கலாம்.
தொடர்ச்சியான கட்டணம் செலுத்தலை மனதில் வைத்து தானாக-பற்று ஆணைக்கான முறை உருவாக்கப்பட்டுள்ளது. கட்டளைகளை ஒரு முறை, தினசரி, வாராந்திர, பதினைந்து நாட்கள், மாதாந்திர, இரண்டு மாத, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு அமைக்கலாம்.
கட்டளைகள் உடனடியாக உருவாக்கப்படுகின்றன மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேதியில் பணம் தானாகவே கழிக்கப்படும்.
ஒரு பயனராக நீங்கள் ஒரு முறை UPI PIN மூலம் உங்கள் கணக்கை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் அடுத்தடுத்த வழக்கமான கட்டணப் பணம் தானாகவே பற்று வைக்கப்படும்.
BHIM UPI செயலியில் UPI ஆட்டோபே அமைத்தலுக்கான படிநிலைகள்
படி 1: BHIM UPI செயலியில் உள்நுழைய வேண்டும்.
படி 2: ஆட்டோ டெபிட் மீது கிளிக் செய்யவும்
படி 3: ஆணை மீது கிளிக் செய்யவும்
படி 4: ஆணையை நிர்வகிக்கவும் (புதியதை உருவாக்கவும் அல்லது கடந்த ஆணைகளை பார்க்கவும்)
படி 5: கட்டண வழக்கம் அல்லது காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் (மாதாந்திர / வாராந்திர / வருடாந்திர, முதலியன)
படி 6: வணிகரின் பெயரைச் சேர்த்து ஆட்டோ டெபிட் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
படி 7: தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.