/indian-express-tamil/media/media_files/2025/03/28/2ZHBft0BqxQwqgTnRRZV.jpg)
இன்றைய சூழலில், பலரும் கூடுதல் வருமானம் ஈட்ட வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஏ.டி.எம் உரிமம் (ATM franchise) ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பாஸ்வாலா யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்:
வருமானம்: தினமும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவளிப்பதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். தினசரி வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை இருக்கும்.
ஏ.டி.எம் வகைகள்: White Label ATM மற்றும் வங்கிகளுடன் இணைந்த ஏ.டி.எம்-கள் உள்ளன. White Label ATM-களை டாடா குழுமம் (IndiCash), இந்தியா ஒன் ஏ.டி.எம், ஹிட்டாச்சி மற்றும் முத்தூட் போன்ற தனியார் நிறுவனங்கள் இயக்குகின்றன. வங்கி ஏ.டி.எம்-களில் எஸ்.பி.ஐ, கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவை அடங்கும்.
இடம் மற்றும் லாபம்: ஏ.டி.எம் நிறுவ சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம். குடியிருப்புப் பகுதிகள் போன்றவை இதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
முதலீடு:
திரும்பப் பெறத்தக்க வைப்புத் தொகை ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப ஒரு முறை முதலீடு ரூ. 3 லட்சம் ஆகும். ஏ.டி.எம் இயந்திரம், கண்காணிப்பு கேமராக்கள், ஏ.சி மற்றும் காவலாளி உட்பட மொத்த முதலீடு ரூ. 6.5 லட்சம் இருக்கக் கூடும். இது ஒரு முறை முதலீடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் மாதிரி:
ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ. 8 வருமானம் கிடைக்கும். பணமில்லா பரிவர்த்தனைக்கு ரூ. 2 என்ற வீதத்தில் கிடைக்கும். ஆறு மாதங்களில் முதலீட்டை திரும்ப எடுக்க அதிக பரிவர்த்தனைகள் செய்ய வேண்டியது அவசியம்.
வணிக செயல்பாடுகள்:
10x10 சதுர அடி அறை ஏ.டி.எம் அமைக்க போதுமானதாக இருக்கும். இதனை நிர்வகிக்கும் நபருக்கு ஏ.டி.எம் இயக்க பயிற்சி வழங்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை ஏ.டி.எம் சரியாக செயல்படுகிறதா என சரிபார்க்கப்படும்.
நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:
தொடர்ச்சியான முயற்சி இல்லாமல் வருமானம் கிடைப்பது இதன் பெரிய நன்மை. இதற்கான விளம்பரமும் தேவையில்லை. எனினும், சரியான இடத்தை தேர்வு செய்யாவிட்டால் லாபம் குறையலாம். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலாளி இருப்பது மிக அவசியம் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.