இன்றைய காலகட்டத்தில் தொலைதூர பயணங்களுக்கு பயணிகள் பெரும்பாலும் ரயில் சேவையை நம்பியிருக்கிறார்கள். இதற்கு சொகுசான பயணம் மட்டுமின்றி எளிதாக கட்டணமும் ஒரு காரணமாக உள்ளது.
எனினும் சில நேரங்களில் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சில காரணங்களால் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. இது ரயில்வே நிர்வாகத்துக்கும், நமக்கும் பிரச்னைதான்.
இந்த நிலையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்ற ரயிலில் வசதி உள்ளது. அது என்ன? எப்படி செயல்படுகிறது என்று குறித்து முதலில் பார்ப்போம்.
முதலில் இந்தக் கோரிக்கையை நீங்கள் 24 மணி நேரத்துக்கு முன்னதாக வைக்க வேண்டும். அரசு ஊழியர் என்றால், திருவிழா போன்ற காரணங்கள் என்றால் சரியாக 48 மணி நேரத்துக்கு முன்பு இந்தக் கோரிக்கையை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
இதை எப்படி சாத்தியமாக்குவது என்று பார்க்கலாம். முதலில் நீங்கள் ரயில் நிலையம் செல்ல வேண்டும். அங்கு உங்களின் ஆதார், பான்கார்டு மற்றும் டிக்கெட் உள்ளி்டட விவரங்களை அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.
அவர் எளிதாக உங்களின் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு மாற்றிவிடுவார். இது காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிக்கு பலன் அளிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“