கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பல்வேறு ஆன்லைன் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், எஸ்பிஐ கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவது எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் மாற்றங்களை மேற்கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேரடி தொடர்பு இல்லாத சேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
கணக்குகளை மாற்ற வாடிக்கையாளர்கள் யோனோ எஸ்பிஐ, யோனோ லைட் மற்றும் ஆன்லைன் எஸ்பிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். கணக்குகள் செலவில்லாமல் ஒரு வாரத்தில் மாற்றப்படும். இருப்பினும், உங்கள் மொபைல் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே ஆன்லைன் செயல்முறை செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
யோனோ எஸ்பிஐ மூலம் உங்கள் கணக்கை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் தொலைபேசியில் எஸ்பிஐ யோனோ பயன்பாட்டில் உள் நுழைய வேண்டும்.
- சேவைகள் விருப்பத்தை அழுத்தவும்.
- அடுத்து பரிமாற்றக் கணக்கு சேமிப்பு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், புதிய கிளைக் குறியீட்டை வழங்கவும் மற்றும் Get Branch பெயரைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் புதிய கிளை பெயரைக் காண முடியும். அது சரியாக இருந்தால் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- விவரங்களை மதிப்பாய்வு செய்து இறுதியாக உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
ஆன்லைன் மூலம் கண்க்குகளை மாற்றுவது எப்படி?
- www.onlinesbi.com க்குச் செல்லவும்.
- தனிப்பட்ட வங்கி என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
- அடுத்து வாடிக்கையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- 'இ-சர்வீசஸ்' விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர், சேமிப்புக் கணக்கின் பரிமாற்றம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது, கணக்கு எண் மற்றும் கிளை பெயர் உள்ளிட்ட கணக்கு விவரங்களை நீங்கள் காண முடியும். அடுத்து, நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுத்து, கணக்கை மாற்ற விரும்பும் கிளைக் குறியீட்டை வழங்கவும்.
- அடுத்து, கிளை பெயரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
- அடுத்து நீங்கள் இருக்கும் கிளைக் குறியீடு மற்றும் புதிய கிளைக் குறியீட்டைப் பயன்படுத்தி கணக்கு பரிமாற்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். பின், உறுதிப்படுத்தல் பொத்தானைக் கிளிக் செய்க.
- OTP ஐ உள்ளிட்டு 'உறுதிப்படுத்து' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இறுதியாக, உறுதிப்படுத்தல் என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கிளை பரிமாற்றக் கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.