SBI Alert :வங்கிக் கணக்கை வேறொரு கிளைக்கு மாற்ற மணிக்கணக்காக காத்திருக்க வேண்டாம்
யோனோ எஸ்.பி.ஐ., யோனோ லைட் மற்றுன் எஸ்.பி.ஐ. ஆன்லைன் மூலம் நீங்கள் இதனை உடனடியாக செய்து கொள்ள முடியும் என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டு தங்கள் வாடிக்கையாளர்களின் கவலையை போக்கியுள்ளது எஸ்.பி.ஐ.
யோனோ எஸ்.பி.ஐ., யோனோ லைட் மற்றுன் எஸ்.பி.ஐ. ஆன்லைன் மூலம் நீங்கள் இதனை உடனடியாக செய்து கொள்ள முடியும் என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டு தங்கள் வாடிக்கையாளர்களின் கவலையை போக்கியுள்ளது எஸ்.பி.ஐ.
SBI savings account to another branch : ஆன்லைன் இருக்க, இனி கவலை எதுக்கு? அனைத்து வங்கித் தொடர்பான ஆன்லைன் சேவைகளும் மக்களின் நேரத்தை நிச்சயமாக மிச்சப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று போன்ற காலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் செல்வதையும் பல வகையில் தடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. ஆன்லைனில் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஒரு கிளையில் உள்ள வங்கிக் கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றுவதையும் தற்போது எளிமையாக்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், அரசு அதிகாரிகள் மாற்றுதல் ஆகி போகும் போது இது போன்ற சேவைகள் அவர்களின் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும்.
Advertisment
உங்களின் வங்கிக் கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்ற விருப்பமா? அப்போது உங்களுக்கு உதவியாக எஸ்.பி.ஐ. உள்ளது. யோனோ எஸ்.பி.ஐ., யோனோ லைட் மற்றுன் எஸ்.பி.ஐ. ஆன்லைன் மூலம் நீங்கள் இதனை உடனடியாக செய்து கொள்ள முடியும் என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டு தங்கள் வாடிக்கையாளர்களின் கவலையை போக்கியுள்ளது எஸ்.பி.ஐ.
If you need help in transferring your account from one branch to another, then SBI has got your back.
— State Bank of India (@TheOfficialSBI) May 7, 2021
ஆன்லைனில் இதனை எப்படி செய்வது?
Advertisment
Advertisements
முதலில் 'www.onlinesbi.com' என்ற இணையத்திற்கு செல்லவும்
அதில் லாகின் செய்து பெர்சனல் பேங்கிங் என்பதை தேர்வு செய்யவும்
இ-சேவையை (e-service) க்ளிக் செய்யவும்.
அதில் ட்ரான்ஸ்ஃபர் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் என்பதை தேர்வு செய்யவும்
நீங்கள் எந்த கணக்கை மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். ஒரு வேளை ஒரே ஒரு கணக்கை மட்டும் வைத்திருந்தால் அது டிஃபால்ட்டாகவே தேர்வு செய்யப்பட்டுவிடும்
பிறகு உங்கள் வங்கியின் கிளைக்கான “ப்ராஞ்ச் எண்ணை” உள்ளீடாக கொடுத்து டெர்ம்ஸ் அண்ட் கண்டிசனை க்ளிக் செய்து சம்மிட் தரவும்
உங்கள் வங்கிக் கணக்கின் தரவுகள் அனைத்தையும் சரியா என்பதை கவனித்துவிட்டு பிறகு கன்ஃபார்ம் தரவும். பிறகு உங்களின் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி. ஒன்று வரும். அதனை உள்ளீடாக கொடுத்து மீண்டும் கன்ஃபர்ம் என்பதை க்ளிக் செய்யவும்
Your branch transfer request has been successfully registered' என்ற செய்தி உங்களின் கணினி திரையில் காட்டும்,
உங்களின் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை பயன்படுத்த இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil