EPFO சந்தாதாரர்கள் தங்கள் பாஸ்புக்கை சரிபார்ப்பது, அவர்களின் EPF நிதியைக் கண்காணிப்பது, ஆன்லைனில் அவர்களின் கோரிக்கையை மாற்றுவது மற்றும் இன்னும் பல சேவைகளை ஆன்லைன் உறுப்பினர் போர்டல் வழியாகப் பெறலாம்.
மேலும், EPF உறுப்பினர்கள் UAN போர்ட்டல் வழியாக தங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
உங்கள் EPF வங்கி விவரங்களை ஆன்லைனில் எப்படி மாற்றுவது என்பது குறித்த சில எளிய வழிகள் இதோ...
முதலில் அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.
உங்கள் UAN உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
இப்போது மெனு பகுதிக்குச் செல்ல வேண்டும்.
இப்போது "நிர்வகி" (Manage) என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
கீழ்தோன்றும் இடத்திலிருந்து, "KYC" என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இப்போது "BANK" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கில் உள்ள பெயர், IFSC குறியீடு போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
பின்னர் சேமி (Save) பொத்தானை அழுத்தி சமர்ப்பிக்கவும்.
அவ்வளவு தான் எளிதாக உங்கள் வங்கி விவரங்கள் புதுப்பிக்கப்பட்டது.
நீங்கள் மாற்றங்களைச் செய்தவுடன், உங்கள் ஆன்லைன் சேவை KYC ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதைக் காண்பிக்கும். அதாவது, உங்களின் புதுப்பிக்கப்பட்ட வங்கி விவரங்களின் ஆதாரத்தை உங்கள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் KYC புதுப்பிப்பு கோரிக்கையை உங்கள் நிறுவனம் ஏற்றுக்கொண்டதும், உங்கள் புதிய வங்கிக் கணக்கு சேர்க்கப்படும் அல்லது மாற்றப்படும். இது தொடர்பான குறுஞ்செய்தியும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் தெரிவிக்கப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil