Advertisment

செலவுகளை கண்காணிக்க செயலிகள்; சரியான முறையில் கையாளுவது எப்படி?

How to use money management apps for your personal finance monitor: உங்கள் அன்றாட வரவு செலவுகளை கண்காணிக்க உதவும் பண மேலாண்மை செயலிகள்; தெரிந்துக் கொள்ள வேண்டியவை இதோ...

author-image
WebDesk
New Update
செலவுகளை கண்காணிக்க செயலிகள்; சரியான முறையில் கையாளுவது எப்படி?

இந்தியர்களான நாம் நிதி திட்டமிடல்களில் எப்போதும் கவனத்துடன் இருப்போம். நம் அன்றாட வரவு செலவுகளை குறித்து வைத்துக் கொள்வோம். இப்போது வரை இதற்கு நாம், குறிப்பேடுகளையோ அல்லது டைரியையோ பயன்படுத்தி வந்தோம். ஆனால் இவற்றில் கணக்கிடுவதில் நமக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. இதற்கு தீர்வாக இந்த நவீன யுகத்தில் நமக்கு பல்வேறு செயலிகள், நமது அன்றாட வரவு செலவுகளை கணக்குகளை கணக்கிட உதவுகின்றன.

Advertisment

இந்த செயலிகளை பயன்படுத்துவதன் மூலம், நாம் வரவு செலவுகளை உள்ளீடு செய்தால் மட்டும் போதும் அவை கணக்கிட்டுக் கொள்ளும். நம்முடைய எதிர்வரும் செலவுகள் மற்றும் சேமிப்புகளை பற்றிய தகவல்களையும் இதில் சேமிக்க முடியும். மேலும், இவை பல வங்கிக் கணக்குகளின் பல டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் வாலெட்டுகளுடன் இணைப்பதன் மூலம் நமது செலவுகளை எளிதாக கண்காணிக்க உதவுகிறது.

பணத்தை திறம்பட நிர்வகிக்க உதவும் செயலிகள்

பண மேலாண்மை செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செலவுகள், பில்கள் மற்றும் வரவு செலவு கணக்குகளை கண்காணிப்பது போன்ற பணிகளை எளிதாக்குகிறது. இந்த பயன்பாடுகள் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படக்குடியது மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது. வாடிக்கையாளர்கள் கைமுறையாக பரிவர்த்தனைகளைச் செய்ய தேவையில்லை. மேலும், ஸ்மார்ட்ஃபோன்களில் கட்டமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை தங்களுடைய நிதித் தரவுகளை தடையின்றி தெரிந்துக்கொள்ளவும் ஒழுங்கமைக்கவும் நம்பலாம். பண மேலாண்மை செயலிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கவும் மற்றும் பயணத்தின்போது தங்கள் பணத்தை சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகின்றன.

செலவுகளைக் கண்காணித்தல்

பண மேலாண்மை செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செலவு பழக்கங்களை அடையாளம் காண உதவும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்கிறார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தெளிவான தகவல்கள் கிடைக்கும். இந்த ஆப்ஸ் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் என்ன செலவழிக்கிறோம் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதில், மளிகை பொருட்கள், ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் பயணம் போன்ற குறிப்பிட்ட வகைகளில் தானாகவே பரிவர்த்தனைகளை வகைப்படுத்தி எதில் அதிகமாக செலவழிக்கிறோம் என தெரிந்துக் கொள்ளலாம்.

சரியான பட்ஜெட்

இந்த செயலிகள் வருமானம் மற்றும் செலவினங்களின் தெரிவுநிலையை வழங்குவதால், வாடிக்கையாளர் எளிதாக பட்ஜெட் கணக்கிட உதவுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைய மாத வரவு செலவுத் திட்டங்களை அமைக்கலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதற்கும் பட்ஜெட் வரம்புகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் சரியான முடிவுகளை நமக்கு வழங்குகிறது. இது வாடிக்கையாளரின் மனதில் சேமிப்பு மனப்பான்மையை வளர்க்க உதவுகிறது மற்றும் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது.

சரியான நேரத்தில் பில்களை செலுத்துதல்

பண மேலாண்மை செயலிகள் மாதாந்திர பில் கண்காணிப்புக்கு வழங்குகின்றன. மின்சாரம் அல்லது கிரெடிட் கார்டு பில்கள் போன்ற பில் கட்டணங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு முன்னறிப்பு செய்கின்றன. இதன் மூலம் தாமதமாக கட்டணம் செலுத்துவதை தடுக்கிறது. கடன் அட்டைகளை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாமதமாக பணம் செலுத்துவதில் அதிக செலவுகளை அனுபவித்திருக்கலாம். இதற்கு இந்த செயலிகள் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டி தேவையற்ற செலவுகளை தவிர்க்கிறது.

பண மேலாண்மை செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு பல நிதி சிக்கல்களை தீர்க்க முடியும்: பட்ஜெட் மற்றும் செலவுகளை பிரித்தல் முதல் பில் கட்டணங்களை நினைவூட்டுவது வரை. பல செயலிகள் தனிநபர் கடன்கள் போன்ற பிற நிதி தயாரிப்புகளையும் வழங்குகின்றன, இதில் வாடிக்கையாளர்கள் ஒரு சில கிளிக்குகளில் தனிப்பயனாக்கப்பட்ட EMI விதிமுறைகளுடன் தேவைக்கேற்ப கடன் வசதியைப் பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Money
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment