Advertisment

SBI Whats App Banking: எஸ்.பி.ஐ அசத்தல் முயற்சி; வாட்ஸ் அப்-பிலேயே இந்த வேலை முடிஞ்சிரும்!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களும் வாட்ஸ்அப் சேவையை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹெச்.சி.எல் டெக், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் உயர்வு.. சந்தை சரிவு

எஸ்பிஐ பங்குகள் ரூ.1.40 காசுகள் உயர்ந்தன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாட்ஸ்அப் பேங்கிங் (WhatsApp banking) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையை பெறுவதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மினி நிதிநிலை அறிக்கை பெறுதல் என பல்வேறு வசதிகளை பெறமுடியும்.
இந்தச் சேவையை பெறுவது குறித்து பார்க்கலாம்.

Advertisment

1) பதிவு செய்தல்
இந்த சேவையை பெற பதிவு செய்தல் அவசியமாகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி ( space) விட்டு உங்கள் (AC NO XXXX) கணக்கு எண்ணையும் டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

2) வாட்ஸ்அப் சேவை
வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்தவுடன் எஸ்பிஐ வங்கி எண்ணான 90226 90226 இதில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும்.

3) வாட்ஸ்அப் வசதியை தொடங்குதல்
90226 90226 இந்த எண்ணிற்கு  ‘Hi SBI’ என குறுஞ்செய்தி அனுப்புங்கள்.வாட்ஸ்அப் பேங்கிங் வசதிக்கு உங்களது எண் பதிவு செய்யப்பட்டு விட்டால், 'Dear Customer,Welcome to SBI Whatsapp Banking Services! என ஆங்கில குறுஞ்செய்தி வரும். அதன்பின்னர், 1) இருப்பு நிலை அறிதல் 2) மினி நிதிநிலை அறிக்கை அறிதல் 3) வாட்ஸ்அப் சேவை பதிவை துண்டித்தல் உள்ளிட்ட பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4) இதர சேவைகளை பெறுதல்
நீங்கள் 1 என டைப் செய்தால் கணக்கின் இருப்பு நிலை அறிக்கை கிடைக்கும். 2 என டைப் செய்தால் கணக்கின் மினி நிதிநிலை அறிக்கையை அறியலாம். இந்த சேவையை துண்டிக்க விரும்பினால் 3 என டைப் செய்யவும். ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃசி பர்ஸ்ட் மற்றும் ஆக்ஸிஸ் வங்கியும் இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையை வழங்குகின்றன.

5) எஸ்பிஐ கார்டு வாட்ஸ்அப் சேவை
எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வாட்ஸ்அப் சேவையை வழங்குகிறது. இந்தச் சேவை மூலம், எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் கார்டு குறித்த தகவல்கள், மதிப்புக்கூட்டு புள்ளிகள், கட்டவேண்டிய தொகை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு  'OPTIN'  என டைப் செய்து 9004022022 என்ற நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இந்தச் சேவையை துண்டித்துக்கொள்ள 08080945040 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Sbi Bank Update Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment