How to view Aadhaar Authentication history in Tamil: உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் எங்கெங்கு பகிர்ந்துக் கொண்டீர்கள் என்ற தகவல்களை நீங்களே வீட்டிலிருந்தப்படியே பார்க்கலாம். எப்படி என்பது இங்கே.
ஆதார் அங்கீகார வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கவலைப்படத் தேவையில்லை! கடந்த ஆறு மாதங்களில் ஒருவர் 50 அங்கீகாரங்கள் வரை ஆதார் அங்கீகாரத்தை சரிபார்க்க முடியும்.
"கடந்த 6 மாதங்களில் 50 அங்கீகாரங்களின் #ஆதார் அங்கீகார #வரலாற்றை நீங்கள் சரிபார்க்கலாம். அங்கீகாரத்தின் சரியான தேதி மற்றும் நேரம் முடிவுகளில் குறிப்பிடப்படும், இது திட்டமிடப்படாத அங்கீகார உள்ளீடு உள்ளதா என்பதைக் கவனிக்க உதவும்" என்று ஆதார் ஆணையம் சமீபத்தில் ட்வீட் செய்தது.
இதையும் படியுங்கள்:
UIDAI இணையதளத்தில் ஆதார் அங்கீகார வரலாறு சேவையானது, கடந்த காலத்தில் தனிநபர் செய்த அங்கீகாரத்தின் விவரங்களை வழங்குகிறது. ஆதார் அங்கீகார வரலாற்றைச் சரிபார்க்க, UIDAI இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். இப்போது, நீங்கள் உங்களின் ஆதார் எண்/VID ஐப் பயன்படுத்தி, இணையதளத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, UIDAI இணையதளங்களில் இருந்து உங்களின் ஆதார் அங்கீகார வரலாற்றைச் சரிபார்க்கலாம். இந்த சேவைக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதில் நீங்கள் செய்த ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் எதிராக ஆதார் அங்கீகார வரலாற்றில் பின்வரும் தகவலை பெறலாம்:
1. அங்கீகார முறை.
2. அங்கீகாரத்தின் தேதி மற்றும் நேரம்.
3. UIDAI பதில் குறியீடு.
4. AUA பெயர்
5. AUA பரிவர்த்தனை ஐடி (குறியீட்டுடன்)
6. அங்கீகார பதில் (வெற்றி/தோல்வி)
7. UIDAI பிழைக் குறியீடு
ஆதார் எண் வைத்திருப்பவர், கடந்த ஆறு மாதங்களில் ஏதேனும் அங்கீகாரப் பயனர் ஏஜென்சி (AUA) அல்லது அவரால் செய்யப்பட்ட அனைத்து அங்கீகாரப் பதிவுகளின் விவரங்களையும் பார்க்க முடியும். இருப்பினும், ஒரு நேரத்தில் அதிகபட்சம் 50 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைப் பார்வையிடுங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.