ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இது அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை இ.பி.எஃப் சேமிப்பிற்கு வழங்க வேண்டும். அதே போல் நிறுவனமும் கணிசமான தொகை ஊழியர்களுக்கு பங்களிக்கும்.
இந்நிலையில், சில தேவைகளுக்காக மருத்துவம், கல்வி, திருமண செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட சதவீதத் தொகையை பெற முடியும். அந்த வகையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலியான உமாங் (UMANG) செயலி பயன்படுத்தி எளிதாக விண்ணப்பிக்கலாம்.
1. முதலில் உங்கள் போனில் UMANG செயலி டவுன்லோடு செய்யவும்.
2. அதில் சென்று services ஆப்ஷன் செலக்ட் செய்து EPF என்பதை கிளிளிக் செய்யவும்.
3. Employee Centric Services என்ற ஆப்ஷனுக்குச் சென்று, Raise Claim என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
4. இப்போது UAN நம்பர், பாஸ்வேர்ட் கொடுக்கவும். உங்கள் எண்ணிற்கு ஓடிபி அனுப்பபடும்.
5. ஓடிபி கொடுத்த பின் நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை உள்ளிடவும். வங்கி கணக்கு விவரங்களை வழங்கவும்.
6. இப்போது அதில் கேட்கும் விவரங்களை கொடுத்தப் பின் ப்ராசஸ் முடிந்து உங்களுக்கு ஒரு எண் அனுப்பபடும்.
7. அந்த எண்ணை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“