scorecardresearch

80சி வரம்பில் உயர்வு இல்லை; பழைய முறை வரி செலுத்துவோர் ஏமாற்றம்

பழைய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு எந்த வரி சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

80சி வரம்பில் உயர்வு இல்லை; பழைய முறை வரி செலுத்துவோர் ஏமாற்றம்
புதிய வரி விதிப்பில் வரி அடுக்குகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மக்கள் உயர் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகவே, 2023 யூனியன் பட்ஜெட்டில் இருந்து எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருந்தன.
அந்த வகையில், வரி செலுத்துவோர் மற்றும் சாமானியர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பு வரம்பில் மாற்றம் கொண்டுவருவார் என எதிர்பார்த்தனர்.

பிரிவு 80சி விலக்கு வரம்பை ரூ.1.5 லட்சத்தில் இருந்து குறைந்தது ரூ.2 லட்சமாக உயர்த்துவது, அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவது, வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக வரி விதிப்பில் இருந்து தப்பித்தல் போன்றவை வரி செலுத்துவோரின் முக்கிய எதிர்பார்ப்புகளாக இருந்தன.

இருப்பினும், அவரது பட்ஜெட் உரையில் புதிய வரி முறையின் கவர்ச்சியை அதிகரிக்க சில மாற்றங்களை முன்மொழிந்தாலும், 2023 பட்ஜெட் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை.

உதாரணமாக, புதிய வரி விதிப்பில் வரி அடுக்குகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பில் தள்ளுபடி வரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் நிலையான விலக்கின் பலன் அதற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பழைய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு எந்த வரி சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இதன் பொருள் 80C விலக்கு வரம்பில் அதிகரிப்பு இல்லை,
அடிப்படை விலக்கு வரம்பில் அதிகரிப்பு இல்லை, மற்றும் வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட வரி ஏதும் இல்லை. பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்துவோர் அதிக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏன் இப்படி?

புதிய வரி விதிப்பை அரசாங்கம் தீவிரமாக ஊக்குவித்து வருவதாக வரி வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆட்சியில் அடிப்படை விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய வரம்பான ரூ.5 லட்சத்துடன் ஒப்பிடுகையில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் வரி செலுத்த வேண்டியதில்லை.

புதிய வரி விதிப்பின் கீழ் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன மற்றும் அதிகபட்ச விளிம்பு விகிதம் 42.74% இலிருந்து 39% ஆக குறைகிறது.
மேலும், புதிய வரி முறையின் கீழ் நிலையான விலக்கு பலன்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன, இது முன்பு இல்லாதது ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: How will budget 2023 benefit taxpayers under both regimes

Best of Express