sukanya-samriddhi-yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) முதலீடு செய்வதன் மூலம் 8.2% வட்டி விகிதத்தில் வருவாய் பெறலாம். ₹ 48,000 முதலீட்டில் இருந்து ரூ.14 லட்சம் வட்டி எப்படி கிடைக்கும் என்பதை முழுமையாக இங்கே பார்க்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் மத்திய அரசு வட்டியை உயர்த்தியுள்ளது. முன்னதாக, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 8% வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டது. ஆனால், வட்டி விகித உயர்வுக்குப் பிறகு தற்போது 8.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 10 வயது வரையிலான குழந்தைகள் பெயரில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு 5 வயது ஆகிறது என வைத்துக் கொள்வோம். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.4 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
இந்தத் திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் ஆகும். அதாவது 2024ஆம் ஆண்டு முதலீடு செய்யத் தொடங்கினால் 2045ஆம் ஆண்டு முதிர்ச்சி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் ரூ. 4,000 சேமித்தால், ஒரு வருடத்தில் ரூ.48,000 முதலீடு செய்ய முடியும். 15 ஆண்டுகளுக்கு கணக்கில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும். கணக்கீட்டின்படி 2042க்குள் இந்த முதலீட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு செய்திருப்பீர்கள்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2045-ம் ஆண்டு முதிர்ச்சியின்போது, வட்டியாக ரூ. 15 லட்சத்து 14 ஆயிரம் கிடைக்கும்.
அதாவது ₹7.20 லட்சம் முதலீட்டில் ₹15.14 லட்சம் வட்டி சம்பாதிக்கலாம். முதிர்வின்போது முதலீட்டுத் தொகையும் வட்டித் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 34 ஆயிரமாகப் பெறுவீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“