Advertisment

ஐ.பி.ஓ வெளியிடும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா; ரூ.25,000 கோடி திரட்ட இலக்கு

பிரபல கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ மூலமாக ரூ.25 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Hyundai Motor to invest 2 45 bn dollors in Tamil Nadu over next 10 years to increase EV production

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ பங்கு வெளியீடு மூலமாக சுமார் $3 பில்லியன் அல்லது ரூ.25,000 கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 14 கோடியே 21 லட்சத்து 94 ஆயிரத்து 700 பங்குகள் வெளியிடுகிறது. இது இந்திய சந்தையில் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கலாம்.

Advertisment

இந்தத் இலக்கு நிறைவேற்றப்பட்டால், எல்.ஐ.சி.யின் ரூ.21,000 கோடி பங்கு திரட்டலை தாண்டிவிடும். தொழில்துறை ஆதாரங்களின்படி, ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட பணத்தை விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொது வெளியீடு முற்றிலும் விற்பனைக்கான சலுகையாக உள்ளது.

இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிதியாண்டு24 இல் இந்தியாவில் 7,77,876 யூனிட் கார்களை விற்றுள்ளது. அதாவது, இதுவரை இல்லாத அளவுக்கு YTD (மே 2024 வரை), ஹூண்டாய் இந்தியா 2,59,669 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மேலும், இது ஆண்டுக்கு 5% அதிகமாகும். க்ரெட்டா, எக்ஸ்டெர் மற்றும் ஐ20 ஆகியவை அதிக விற்பனையாளர்களாக உள்ளன. இதுமட்டுமின்றி, ஹூண்டாயின் உலகளாவிய விற்பனையில் இந்திய சந்தை 13% பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment