New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/HYUNDAI-MOTOR-INDIA.jpg)
தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 2.45 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவின் EV சந்தை இன்னும் சிறியதாக உள்ளது, இது 2022 இல் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 1% மட்டுமே ஆகும்.
தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 2.45 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.200 பில்லியன் ($2.45 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் ( Detroit of Asia) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ரெனால்ட்-நிசான் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் உற்பத்திக்கான மையமாக சென்னை உள்ளது.
இந்த நிலையில், ஹூண்டாயின் இந்திய துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா மூலம், ஆண்டுக்கு 178,000 யூனிட் திறன் கொண்ட பேட்டரி பேக் அசெம்பிளி யூனிட்டையும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென் மாநிலம் முழுவதும் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னைக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி அளவை தற்போது 775,000 ஆக இருந்து ஆண்டுக்கு 850,000 வாகனங்களாக அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், ஹூண்டாய் அதன் ஏற்றுமதி அளவுகள் 2022 இல் 181,000 இல் இருந்து 2032 இல் 319,000 வாகனங்களை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.
தொடர்ந்து, ஹூண்டாய் உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையில் ஐந்து புதிய EV அறிமுகங்களை வரிசைப்படுத்துகிறது, 2032 ஆம் ஆண்டளவில் 20% பங்கை இலக்காகக் கொண்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவின் EV சந்தை இன்னும் சிறியதாக உள்ளது, இது 2022 இல் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 1% மட்டுமே ஆகும். 2030 ஆம் ஆண்டிற்குள் அந்த பங்கை 30% ஆக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
ஹூண்டாய் இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில் சுமார் 15% பங்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.