ஒருமுறை சார்ஜ் செய்தால், 609 கிலோமீட்டர் பயணம் : ஹூண்டாய்-ன் புதிய மின்சாரக் கார்

ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வகை வாகனம். இந்த வாகனம் குறைந்தபட்ச அளவிலேயே காற்று மாசு ஏற்படுத்தும் அளவில் சிறப்பு தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.சந்திரன்

தென் கொரியாவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், தனது புதிய மின்சாரா கார்கள் இரண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஹூண்டாய் நெக்ஸோ என்பது ஃப்யூல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் எஸ்யூவி வகையைச் சேர்ந்தது.

அதாவது, ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வகை வாகனம். இந்த வாகனம் குறைந்தபட்ச அளவிலேயே காற்று மாசு ஏற்படுத்தும் அளவில் சிறப்பு தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த வாகனத்தை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, இதில் பயணிக்கத் தொடங்கினால், கொரிய நாட்டு சான்றிதழ்படி 609 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். தற்போதைய நிலையில் இந்த அளவு அதிக திறன் கொண்ட வேறு வாகனம் எதுவும் உலகில் இல்லை.

இதேபோல, உலக சந்தையைக் குறி வைத்த மற்றொரு மின்சார காரான அயானிக் (IONIQ) என்ற பெயரிலான பேட்டரியில் இயங்கும் வாகனத்தையும் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் தற்போது சந்தையில் உள்ள ம்ற்ற எந்த காரையும் விட சிறந்த அயக்கப் பண்புகளைக் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

×Close
×Close