வாரத்துக்கு 15 முதல் 25 லட்சம் விண்ணப்பங்கள் : வருமான வரிக் கணக்கு எண் பெற அதிகரிக்கும் ஆர்வம்

2018 ஜனவரி 28ம் தேதி நிலவரப்படி, 20,73,434 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன அல்லது உடனடி நடவடிக்கைக்கு காத்துக் கொண்டுள்ளன.

By: April 5, 2018, 6:36:12 PM

ஆர்.சந்திரன்

மத்திய அரசின் நிதித்துறை மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது நாட்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முன் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, பான் நெம்பர் (PAN Number) எனப்படும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் தனி அடையாள எண் பெற பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், தற்போது ஒவ்வொரு வாரமும் சராசரியாக 15 முதல் 25 லட்ச விண்ணப்பங்கள் அரசுக்கு வருவதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துப் பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரசாத் சுக்லா இது குறித்து பேசுகையில், அதிகரித்த வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து முடிவு எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது சராசரியாக சில மணி நேரங்கள் முதல் அதிகபட்சமாக 2 வாரங்கள் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது.

2018 ஜனவரி 28ம் தேதி நிலவரப்படி, 20,73,434 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன அல்லது உடனடி நடவடிக்கைக்கு காத்துக் கொண்டுள்ளன. தேவையில்லாத தாமதம் ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது NSDL e-Gov மற்றும் UTIITSL போன்ற நிறுவனங்களிடம் இந்த விண்ணப்ப பரிசீலனைப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:I t department receives 15 25 lakh pan applications per week

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X