/tamil-ie/media/media_files/uploads/2020/07/gallerye_07201559_2533087.jpg)
sbi interest sbi bank interest state bank interest
ib loan indian bank loan ib bank loan: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், 7% எனும் நிலையான வட்டி வீதத்தில் இந்தியன் வங்கிக் கிளைகளில் நகைக் கடன்கள் வழங்கப்படும்.அதாவது, ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும். ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி வழங்குகிறது. இது தவிர, சிறு, குறு மற்றும்நடுத்த தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களை இந்தியன் வங்கி வழங்கி வருகிறது.
IND KCC கோவிட் Sahaya கடன் (IND KCC Covid Sahaya Loan) திட்டத்தின் கீழ் கிஸான் கடன் அட்டை (Kissan Credit Card) வசதியுள்ள பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் 10 சதவிகித வரம்பை soft loan ஆகப் பெறலாம், என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கடன்களை 6 மாத கால அவகாசத்தில் சுலப தவனைகளில் திரும்ப செலுத்தலாம்.
இதுதவிர ’சுய உதவிக் குழு கோவிட் சகாய கடன்’ (SHG Covid Sahaya Loan) சிறப்பு கடன் தொகுப்பின் கீழ் சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் தலா ரூபாய் 5,000/- பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுய உதவிக் குழு ரூபாய் 1,00,000/- வரை soft loan ஆகப் பெற்றுக் கொண்டு சுலப தவனைகளில் திரும்ப செலுத்தலாம்.
கோவிட் -19 விவசாயிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களையும் பாதித்துள்ளது. உணவு மற்றும் வேளான் செயலாக்க நிறுவனங்கள் பணப் புழக்கத்தில் சரிவைக் கண்டுள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் வேலை செய்வதற்கு, தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு, அத்தியாவசிய இடுப்பொருட்களை வாங்குவதற்கும் சந்தைகளை அனுகுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் அவர்களிடம் பணப்புழக்கம் இல்லை. தங்கள் உற்பத்தி பொருட்கள் குறித்து மக்கள் மத்தியில் பரவியுள்ள போலி செய்திகளால் கோழி வளர்ப்புத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களே இத்தனை சலுகைகளும் உங்களுக்கு தான்!
';தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us