இந்தியாவின் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்களை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது. இப்போது வரை வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே கொண்ட பெட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது படுக்கை வசதியும் உள்ள ஸ்லீப்பர் கோச் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்களை வடிவமைத்துள்ளது. மொத்தம் 3 வகையான ஏசி பெட்டிகள் ரயிலில் உள்ளன. ஏசி 1 டயர், ஏசி 2 டயர் மற்றும் ஏசி 3 டயர் உள்ளது.
ஐ.சி.எஃப் பொது மேலாளர் சுப்பா ராவ், புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் விரைவில் சோதனை செய்யப்படும் என்று கூறி விவரித்தார். அவர் கூறுகையில், ரயில் லக்னோவின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மற்றும் மேற்கு ரயில்வே தடங்களில் விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ரயில் சோதனை ஓட்டத்திற்கு தயாராகிவிடும். 90 கிமீ வேகத்தில் தொடங்கி 180 கிமீ வேகம் வரை படிப்படியாக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். எமர்ஜென்சி பிரேக்கிங், ஆதுலேசன், கட்டுப்பாடு மற்றும் மின் அமைப்புகளின் சோதனை உள்பட பல்வேறு கட்டங்களாக சோதனை செய்யப்படும்.
இந்த செயல்முறை அனைத்தும் ஜனவரி 15, 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர், ஜனவரி 15க்குள் ரயிலுக்கு சான்றிதழ் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“