ஒரு மொத்த தொகையை வங்கி அல்லது அஞ்சலகங்களில் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது ஃபிக்ஸட் டெபாசி்ட ஆகும். இது நிலையான வருமானத்தை வழங்குகிறது. பங்குச் சந்தை முதலீடு போல் சந்தை அபாயங்களால் பாதிக்கப்படுவது இல்லை.
2/5
ஹெச்.டி.எஃப்.டி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரூ.3 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கான நிலையான வைப்பு விகிதங்களை திருத்தியுள்ளது. ஜூலை 24, 2024 நிலவரப்படி, வங்கி இப்போது பொது வைப்பாளர்களுக்கு 3% முதல் 7% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
3/5
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 3.50% முதல் 7.00% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Advertisment
4/5
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.20% வரையிலான நிலையான வைப்பு விகிதங்களை வழங்குகிறது.
5/5
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.20% வரையிலான நிலையான வைப்பு விகிதங்களை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.