/tamil-ie/media/media_files/uploads/2019/03/thalapathy-62-3-1.jpg)
iob internetbanking online
icici atm near me : வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அவர்களுக்காகவே மிகச் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தும் பொதுத்துறை வங்கிகள் மத்தியில் சில தனியார் வங்கிகளும் தங்களால் முடிந்த வரை சில சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ
வங்கி, கடன் திட்டத்தை மேலும் எளிதாகியுள்ளது. அதுக் குறித்த முழுவது விபரம் தான் இது.
வங்கிகளில் கடன் வாங்க வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் சென்று அது குறித்து மேனேஜரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே லோன் வாங்க ஒப்புதல் கிடைக்கிறது. ஆனால், தனியார் வங்கியான ஐசிஐசிஐ, ஏடிஎம் இயந்திரம் மூலமாகவே கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களை கிரெடிட் அனாலிசிஸ் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஐந்து வருடத்துக்கான தனிநபர் கடன்களை வழங்கும் திட்டத்தை ஐசிஐசிஐ தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள், ஏடிஎம் இநய்திரங்களிலேயே தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்து முடித்தால், உங்களுடைய கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வட்டி விகிதம் எவ்வளவு, பிராசசிங் கட்டணம் எவ்வளவு ஆகிய விவரங்கள், ஏடிஎம் இயந்திர திரையில் காண்பிக்கப்படும். டிரான்சாக்சனின்போது, அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து கடன் தேவைப்படுவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.