scorecardresearch

ஜனவரி 1 முதல் சேவை கட்டணங்கள் உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI

இதர நிதிசாரா பணப்பரிவர்த்தனைகள் குறிப்பாக இருப்பு தொகையை அறிந்து கொள்வது, மினி ஸ்டேட்மெண்ட்களை பெறுதல் மற்றும் பின் எண்ணை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

ஜனவரி 1 முதல் சேவை கட்டணங்கள் உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI

ICICI bank alert Service charge : ஜனவரி 1ம் தேதி முதல் தங்களின் சேவைக் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிவித்துள்ளது. ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.சி.ஐ.சி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது முதல் ஐந்து முறை பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் அதற்கு அடுத்து பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும். 2022 முதல் நாளில் இருந்து இந்த கட்டணம் ரூ. 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர நிதிசாரா பணப்பரிவர்த்தனைகள் குறிப்பாக இருப்பு தொகையை அறிந்து கொள்வது, மினி ஸ்டேட்மெண்ட்களை பெறுதல் மற்றும் பின் எண்ணை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியற்ற இதர வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் இருந்து முதல் மூன்று முறை பணம் எடுக்கும் போது கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இது சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, மற்றும் டெல்லி மெட்ரோகளில் மட்டுமே பொருந்தும். இதர இடங்களில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து பணம் எடுக்கும் போது ரூ. 20 சேவைக் கட்டணமாக நிதி சார் பரிவர்த்தனைகளுக்கும், ரூ. 8.50 பைசா நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 1ம் தேதி முதல் ரூ. 21 -யும், நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கு ரூ. 8.50 பைசாவும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Icici bank alert service charge on savings ac atm transaction charges to be hiked from january 01